Wednesday, March 23, 2011

நண்பர்களின் திருமணத்தில்.. காமெடி, கலாட்டா, ஜொள்ளு!! (Scene 2) + குட்டிச் சாத்தான் Intro!!

Scene 1

இதுல ஒரு புது கேரக்டர்-அ உங்களுக்கு அறிமுகபடுத்தப் போறேங்க.. ரொம்ப நாளா அவன் இம்சை தாங்க முடியல..

"மச்சி ப்ளீஸ் டா.. உன்னோட ப்ளாக்-ல எனக்கொரு சின்ன பார்ட்-ஆவது குடுடா.. ப்ளீஸ் ப்ளீஸ்"-ன்னு கெஞ்சிட்டே இருந்தான்.. சரி நம்மலாலையும் ஒருத்தன் வாழ்ந்தான்னு இந்த சரித்திரம் சொல்லட்டும்ன்னு நானும் ஒத்துகிட்டேன்..

ஆனா முன்னாடியே உங்கள எச்சரிக்கறேன்.. கோர்ட்-ல எல்லாரும் 'நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மையை தவிர வேறெதுவும் இல்லை'-ன்னு, சத்தியம் பண்ற மாதிரி.. அவனுக்கு வேற ஒரு உறுதிமொழி இருக்கு.. 'நான் சொல்வதெல்லாம் பொய்.. பொய்யை தவிர வேறெதுவுமில்லை'-ன்றது தான் அது.. அதனால அவன் சொல்றதுக்கெல்லாம் ப்ளாக் பொருப்பில்லைங்க your Honour.. So here I am introducing, "வெத்து வேட்டு.. வேகாத பருப்பு.. the great.. குட்டிச் சாத்தான்.."
ஹி ஹி ஹி..
குட்டிச் சாத்தான்: மக்களே!! இவன நம்பாதீங்க.. இவன் ஜப்பான்-ல Jackie chan கூப்டாக.. மலேசியா-ல Michael Jackson கூப்டாகன்னு கலர் கலரா ரீல் விடுவான்.. இந்தவாட்டி பதிவுல சரக்கு கொஞ்சம் கம்மி.. அதனால நீ வந்து நடுல கொஞ்சம் "மானே, தேனே, பொன் மானே.. அப்புறம் அலுமினியம் மானே எல்லாம் போட்டன்னா நல்லா இருக்கும்ன்னு கால்ல விழாத கொறையா கெஞ்சி கேட்டுக்கிட்டான்.." அதான் வளர்ற பய்யன் போனா போகட்டும் கொஞ்சம் உரம் போடலாம்ன்னு வந்தேன்!! ஹி ஹி ஹி..

கீறிப்புள்ள: உன்ன 1st ரெண்டு பத்தி முடியறவரைக்கும் ஒன்னும் பேசக்கூடாதுன்னு சொன்னேன்-ல.. போ..

கு.சா. : சரி..சரி.. இந்தக் கதையில் என்னுடைய பாத்திரம் என்னவோ??

கீறிப்புள்ள: ஹேன்ன்ன்.. எவர்சில்வர் அண்டா!! பேசாம ஓரமா போய் நில்லு..போ..போஓஒஒஒஒ!!!

கு.சா. : சதா மாதிரி சொல்றாராமா.. சாதா தோசை சொல்ற மாதிரி இருக்கு..

இந்த சாப்பாடுங்கறது இருக்கே.. அது (கு.சா. : டேய்.. பழமொழி சொல்ல போறியா.. கம் பாக் டு த ஸ்டோரி மேன்)

மதுரைல நடக்கற கல்யாணத்துக்கு போக முந்தின நாள் நைட் ட்ரெயின் ஏறினோம்..(கு.சா. : பின்ன நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு ப்ளைட்லையா டிக்கெட் எடுப்பாங்க.. உண்மைய சொல்லு அந்த டிக்கெட்டுக்கே நீ இன்னும் ரூவா குடுக்கல தான..)

நைட் சாப்பிட வாங்கின பிரியாணிய வாய்ல வெக்க முடியல..
(கு.சா. : அப்ப மூக்குல இல்லன்னா நெத்தியில வெக்க முடியுமா?? இல்ல கொஞ்சம் பொது அறிவ வளத்துக்கலாமேன்னு தான் கேட்டேன்.. ஹி ஹி ஹி..)

கீறிப்புள்ள:  டேய்!! ஏன்டா இப்டி 'ஜோ' அக்கா மாதிரி அஞ்சு ரூவா குடுத்தா ஐநூறு ரூவாய்க்கு கூவற.. அந்த்த சீன் நீகு லேதுலே.. கொன்ச்சம் தக்கவ சேசுகோ நைனா!!

ஒரு பன்னாடை சொல்லிச்சு 'பரவால்ல மச்சி.. நைட் சாப்பிடாம இருந்தா காலைல நல்லா பசிக்கும்.. பந்தியில ஒரு கட்டு கட்டலாம்'-ன்னு.. அப்பவே நாளைக்கு ஏடா கூடமா ஏதோ நடக்க போகுதுன்னு பட்சி சொல்லிச்சு.. பச்சடி பத்தி நினைச்சுட்டு இருக்கும்போது பட்சி சொல்றத யாரு மதிப்பாங்க..

அடுத்த நாள் Train கூவிட்டே மதுரைல லேன்ட் ஆக.. "கில்லி-ல ரயில்வே ஸ்டேசன்-ல முத்து பாண்டி தனலட்சுமியோட அண்ணன மர்டர் பண்ற மாதிரி எதையும் பார்க்காம சீக்கிரமா போனுமேன்னு கூட வந்த கூமுட்ஸ்க்கு எல்லாம் கொஞ்சம் கூட பயமே இல்ல.. அந்த டாங்கீஸ் எல்லாம், எறங்கினோமா கெளம்பினோமான்னு இல்லாம.. பாக்கற எடத்துல எல்லாம் நின்னு, உக்காந்து, படுத்து எல்லாம் போட்டோ எடுத்துட்டு இருந்தானுக..(கு.சா. : ங்கொய்யாலே.. நீ ஒரு போட்டோல கூட இல்லன்னு ப்ரூவ் பண்ணு பாப்போம்.. நான் ஒரு பக்க கொம்ப வெட்டிகறேண்டா..) ஒரு வழியா ஹோட்டல்-க்கு போய் காலைக்கடன் எல்லாம் முடிச்சு எல்லாரும் ரெடி ஆனோம்.. (கு.சா. : அங்க போயும் 'Dove' சோப்பு இருந்தா தான் குளிப்பேன்னு சீன் போட்ருப்பயே..)
டெரர் வண்டி!!
அந்த ஊர்னரதால ஒரு சுமோ செட் பண்ணி ஒரு செட்டப்பா கெட்டப்பா மண்டபத்துக்கு கெளம்பினோம்.. கொஞ்ச தூரம் போன அப்றமா ஒரு வெள்ளை ஸ்கார்பியோ பின்னாடியே பாலோ பண்ணிட்டு ஹார்ன் அடிச்சு, வண்டிய ஒதுக்க சொல்லி சிக்னல் குடுத்துட்டே வந்துட்டு இருந்தது.. வண்டியில "காந்தி அழகிரி-ன்னு" பேர பாத்ததும் கொஞ்சம் டென்ஷன் எகிறிடுச்சு.. ஆஹா பசங்க எவனும் தெரியாம வாய விட்டுடானுகலான்னு பயம் வேற.."சன்மூவம், வண்டிய அடிச்சு ஓட்டுன்னு" அந்த டிரைவர்-க்கு எவ்ளோ சொல்லியும் ஓரமா ஒதுக்கிட்டான்.. "இன்னைக்கு செத்தாண்டா சேகர்-ன்னு" இஷ்ட தெய்வத்தை எல்லாம் நடுங்கிட்டே தொணைக்கு கூப்டுட்டு இருந்தேன்..

கு.சா. : அப்ப அன்னைக்கு சுமோ சீட்-ல சூச்சு நீதானா?? 
"கண்டுபுடிச்சேன்.. கண்டுபுடிச்சேன்.. சூச்சு போனவன கண்டுபுடிச்சேன்.. சிஷ்யா.. சிஷ்யா.. இது சரியா சரியா.. " ஹா ஹா ஹா..

கீறிப்புள்ள: அது பிஸ்லேரி பாட்டில் ஒடஞ்சதுல லீக் ஆன வாட்டர் டா.. அந்த வாட்டர் சத்தியமா என்னோட வாட்டர் இல்லடா..

பாத்தா, அந்த வண்டி எங்கள தாண்டி சீறிட்டு போச்சு.. மதிக்க கூட இல்ல.. (கு.சா. : மிதிக்காம போனாங்கலேன்னு சந்தோஷ படுடா..) அடடா நாம தான் இந்த பாழா போன சினிமா எல்லாம் பாத்து ஓவரா கற்பனை பண்றமோ?? (கு.சா. : அதுல நோக்கு டவுட்டே வேணாம் தலீவரே..ஹி ஹி..) ஒரு வழியா மண்டபத்துக்கு போனோம்.. எல்லாருக்கும் அகோர பசி..
இந்த மாதிரி பெரிய இலை ஒன்னு கொண்டு போல.. அவ்ளோதான்..
கூடவந்த ஒரு நல்லதம்பி: "நேரா பந்திக்கு போனா நல்லா இருக்காது.. வந்ததுக்காக கொஞ்ச நேரம் ஹால்-ல உக்காருவோம்"ன்னான்.. (கு.சா. : இந்த மாதிரி பசங்க கூட எல்லாம் நீ பழக்கம் வெச்சிருக்கியா.. இத்தோட நம்ம பிரண்ட்ஷிப் கட்டு..) யாரவது சாப்பிட கூப்பிடுவாங்கன்னு பாத்தா.. யாருமே அந்த பக்கம் கூட வரல.. சரி, வீரர் வாழ்கையில் வெட்டுக்கள் சகஜம்தானேன்னு நாங்களா சாப்ட எறங்கி போனா.. அங்க வெடிச்சது ஐய்ட்டம் பாம்.. அதே தாங்க!! ஒரு பெரியவர் தழு தழுத்த வாய்ஸ்-ல 'தம்பி ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்திருக்க கூடாதா?? இப்பதாம்ப்பா டிபன் ஐய்ட்டம் எல்லாம் காலி ஆச்சு-ன்னாரு.. (கு.சா. : "பரவால்லைங்க சாமியோவ்.. கொஞ்சம் பழைய சோறு இருந்தா போடுங்க நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்"-ன்னு சொல்ல வேண்டியது தான.. ஹா ஹா ஹா..)

"நைட் சாப்பிடாம இருந்தா காலைல நல்லா பசிக்கும்"..
"நைட் சாப்பிடாம இருந்தா காலைல நல்லா பசிக்கும்"..
"நைட் சாப்பிடாம இருந்தா காலைல நல்லா பசிக்கும்"..
அப்டின்னு அந்த டயலாக் மண்டபம் பூரா எக்கோ எபெக்ட்.. செம கடுப்பு.. அந்த டயலாக் சொன்ன நாதாரிய பாத்ரூம்குள்ள விட்டு கும்மி எடுத்தோம்..

பசியில மண்டபத்துல இருந்த பொண்ணு எல்லாம் நாயர் கடை பண்ணு மாதிரி தெரிஞ்சது.. ஆர்கெஸ்ட்ரா வேற செம சவுண்ட்டு.. கொலை வெறில ஒரு காணக் குயில் எல்லா பாட்டையும் கடிச்சு துப்பிட்டு இருந்தாங்க.. அண்ணா முடியலைங்கண்ணா.. சவுண்ட கொஞ்சம் கொறைங்கன்னான்னு கெஞ்சி பாத்தோம் கதறி பாத்தோம்..ஹுன்ன்ன்ன் ஹும்ம்ம்ம்... அக்கா நாங்க வேணும்னா ஸ்பீக்கர்க்கு மேல போட்டு குடுக்கறோம்.. மீயுட் பண்ணிட்டு என்ன வேணா பாடிக்கோங்கன்னு ஆபர் எல்லாம் குடுத்தோம்.. இருந்தாலும், காதுல இரத்தம் பாக்காம விட மாட்டேன்னு ஒரு முடிவோட இருந்தவங்கள என்ன பண்ண முடியும்.. (கு.சா. : நீ பாடறேன்னு சொல்லியிருந்தேன்னா அவங்க தெரிச்சு ஓடிருப்பாங்க.. ஹா ஹா ஹா..)

சரி வெளிய போய் ஒரு வாய் டீ-தண்ணி சாப்பிடலாம்னா.. மாப்பிள வீட்டுக்காரங்க, பத்து நிமிஷம் இருங்க பொங்கல் ரெடி ஆயிரும்..உப்மா ரெடி ஆயிரும்ன்னு அன்புத்தொல்லை வேற.. நொந்து போய் மினரல் வாட்டர் வாங்கி குடிச்சுட்டு.. வெயிட் பண்ணலாம்ன்னு ஒரு குரூப் உள்ளார போனாங்க.. நானும் பசி தாங்க முடியாத இன்னொரு நண்பனும் எஸ்கேப்.. அங்க பக்கத்துல இருந்த ரோட்டு கடை ஒன்ல இருந்த பசிக்கு இட்லி, தோசை ஆப்பாயில்-ன்னு செம கட்டு கட்னோம்.. :D (கு.சா. :  அதான பார்த்தேன்.. பாம்பு கறி சாப்ட கீறி சாப்டாம இருக்கறதா.. நெவெர்!!)

யப்பான்னு, ஏப்பம் உட்டுட்டே உள்ள போறப்ப லபக்குன்னு புடிச்சு நேரா கொண்டு போய் பந்தியில விட்டுட்டாங்க.. எங்கடா போனீங்கன்னு மத்த அரக்கனுங்க எல்லாம் டவுட்டா கேக்க.. 'இந்த ஊர்ல வந்ததுல இருந்து பிச்சைகாரங்கலையே பாக்கல மச்சி.. அதான் அப்டியே சுத்தி பாத்துட்டு வந்தோம்'-ன்னு ஏதோ அப்போதைக்கு தோணினத சொல்லி தொலைச்சேன்..
(கு.சா. :  சனி உன் நாக்குல சல்சா ஆடிருச்சு போல.. ஹா ஹா ஹா..)

'ஏன் இருக்கற வேலைய விட்டுட்டு, நீ இந்த ஊர்ல பிச்சை எடுக்க வரலாம்ன்னு பாக்கறையா??'
'இல்லடா நாலு எலை தள்ளி அஞ்சாவது எலை-ல தம்மாத்துண்டு எதுவும் கெடைக்குமான்னு போயிருப்பான்'-ன்னு நக்கல் மேல நக்கல் எல்லாம் கேட்டும் கேக்காத மாதிரி, உண்மை தெரியாத வரை சந்தோசம்டா சாமின்னு பந்தியில உக்காந்தோம்.. பாசம் பொங்க பொங்கலை அள்ளி அள்ளி வெச்சாங்க.. மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம கொஞ்சம் கோழி கொத்தற மாதிரி கொத்திட்டு எல்லாரும் எழுந்திரிக்கரப்ப கூடவே போயிட்டோம்..

ஆனாலும் என் கூட வந்தவன நான் பாராட்டியே ஆகணும்.. பதினோரு மணிக்கு அவ்ளோ சாப்ட அப்பறமும் பன்னண்டு மணிக்கு மதிய சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு பாயசம் சூப்பர் மச்சி.. நீ மிஸ் பண்ணிட்டன்னான்.. :O
கு.சா. : ரெண்டு Unlimited மீல்ஸ் வாங்கி அசால்டா சாப்பிடறவங்களுக்கு இதெல்லாம் கால் தூசு.. ஹி ஹி ஹி..

9 comments:

அப்பாவி தங்கமணி said...

//மச்சி ப்ளீஸ் டா.. உன்னோட ப்ளாக்-ல எனக்கொரு சின்ன பார்ட்-ஆவது குடுடா.. ப்ளீஸ் ப்ளீஸ்"-ன்னு கெஞ்சிட்டே இருந்தான்//
ஐயோ பாவம்...இவ்ளோ அப்பாவியா இருக்காரே உங்க பிரெண்ட்... சொந்த செலவுல சூனியம் பாவம்...:)))

//அதனால நீ வந்து நடுல கொஞ்சம் "மானே, தேனே, பொன் மானே.. அப்புறம் அலுமினியம் மானே எல்லாம் போட்டன்னா நல்லா இருக்கும்ன்னு//
ஹா ஹா ஹா... இது இன்னொரு மைண்ட்வாய்ஸ் போல இருக்கே... அப்படினா உங்களுக்கு சனி பெயர்ச்சி ஆரம்பம்ம்ம்ம்ம்...:)))

//சதா மாதிரி சொல்றாராமா.. சாதா தோசை சொல்ற மாதிரி இருக்கு..//
சூப்பர் சூப்பர் சூப்பர்... குட்டிசாத்தான் கலக்கறீங்க நீங்க... :))

//கொன்ச்சம் தக்கு சேசுகோ நைனா//
தம்ப்ரி... அது "தக்கு சேசுகோ"வும் இல்ல "தொக்கு சேசுகோ"வும் இல்லங்க... "தக்கவ சேசுகோ"... ஜஸ்ட் கிட்டிங்... ஹா ஹா ஹா...:))

//கில்லி-ல ரயில்வே ஸ்டேசன்-ல முத்து பாண்டி தனலட்சுமியோட அண்ணன மர்டர் பண்ற மாதிரி எதையும் பார்க்காம சீக்கிரமா போனுமேன்னு//
இப்படியெல்லாம் சொன்னா நீங்க "டாக்டர்" "இளைய தளபதி"னு நெனசுப்போமா...ஹையோ ஹயோ...:)))

//நைட் சாப்பிடாம இருந்தா காலைல நல்லா பசிக்கும்//
நைட் சாப்பிடாம இருந்தா காலைல நல்லா "ப" தொண்டைல "சிக்கும்"னு சொல்லி இருப்பாங்களோ... ஹா ஹா...:)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////நைட் சாப்பிடாம இருந்தா காலைல நல்லா பசிக்கும்".. ///////

இனிமே இப்படி வெறும் வயித்துல போகாம ஒரு சோடா அடிச்சிட்டு போய் பாருங்க..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கி இருக்கிங்க தலைவரே...... டெம்ப்ளெட்டும் இப்போ ரொம்ப நல்லாருக்கு.........!

கீறிப்புள்ள!! said...

@அப்பாவி
/ஐயோ பாவம்...இவ்ளோ அப்பாவியா இருக்காரே உங்க பிரெண்ட்//
ஹா ஹா ஹா.. நான் ஒரு ஸ்டார்ட்டர்.. இன்னும் மெயின் கோர்ஸ் வரலேன்னு அவனுக்கு தெரியாது.. நீங்களும் சொல்லாதீங்கோ.. ;))

/இது இன்னொரு மைண்ட்வாய்ஸ் போல இருக்கே...//
எக்சாக்ட்லி.. :)))

/அப்படினா உங்களுக்கு சனி பெயர்ச்சி ஆரம்பம்ம்ம்ம்ம்...//
ஆஹா.. சும்மா இருந்தவன சொரிஞ்சு விட்டுட்டேன் போலயே.. அவ்வ்வ்வவ்வ்வ்வ்..

/"தக்கவ சேசுகோ"//
மீலாண்டி, ஏசி காருலு..ச்சி..அக்கா காருலு.. செப்பக போதே ஈவன்னி எலா தெலுஸ்துந்தி மாகு.. சரியா கேட்டேனா?? ஏதோ எனக்கு தெரிஞ்ச ஓட்ட தெலுகுல ஓட்டிட்டு இருக்கேன்.. ஹி ஹி ஹி.. :)))

/நீங்க "டாக்டர்" "இளைய தளபதி"னு நெனசுப்போமா//
நோ.. நோ.. சிஸ்டர்.. அப்டி எல்லாம் நெனச்சு என்னை அசிங்க படுத்தி விடாதீர்கள்.. ஹி ஹி ஹி.. :))

/காலைல நல்லா "ப" தொண்டைல "சிக்கும்"னு சொல்லி இருப்பாங்களோ"//
ஹா ஹா ஹா.. ஒரு வேலை இப்படியும் இருக்குமோ.. :))

கீறிப்புள்ள!! said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
/வெறும் வயித்துல போகாம ஒரு சோடா அடிச்சிட்டு போய் பாருங்க//
புஸ்ஸுன்னு ஏர் எல்லாம் போயிருமா பாஸ்?? செட்டியார் தண்ணிக்குள்ள காத்த உட்ட மாதிரி எதுவும் ஏடா கூடமா ஆயிராதே... ஹி ஹி ஹி.. :))

/கலக்கி இருக்கிங்க தலைவரே...... டெம்ப்ளெட்டும் இப்போ ரொம்ப நல்லாருக்கு//
மிக்க நன்றி தலைவா.. :)))

sakthi said...

கீறி கலக்கறே
கலக்கறே கட்டம்
கட்டி கலக்கறே
திட்டம் தீட்டி கலக்கறே
பாரு பாரு

அனாமிகா துவாரகன் said...

வெளிய போய் சாப்பிட்டு வந்ததில் இருந்து முடிவு வரை நாலைஞ்சு வாட்டி படிச்சு சிரிச்சுக்கொண்டே இருக்கறேன்.

//நொந்து போய் மினரல் வாட்டர் வாங்கி குடிச்சுட்டு.. //
//'இந்த ஊர்ல வந்ததுல இருந்து பிச்சைகாரங்கலையே பாக்கல மச்சி.//
//'ஏன் இருக்கற வேலைய விட்டுட்டு, நீ இந்த ஊர்ல பிச்சை எடுக்க வரலாம்ன்னு பாக்கறையா??'//

நல்ல நடை.


//பதினோரு மணிக்கு அவ்ளோ சாப்ட அப்பறமும் பன்னண்டு மணிக்கு மதிய சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு பாயசம் சூப்பர் மச்சி.. நீ மிஸ் பண்ணிட்டன்னான்.. :O//
ஓ நம்ம பிளட்டா. கேட்டதுன்னு சொல்லுங்க. ஹா ஹா.

கீறிப்புள்ள!! said...

@sakthi-க்கா நன்றி. நன்றி.. ஆனா நீங்க எப்போ இருந்துக்கா 'சிம்பு' விசிரியா மாறினீங்க.. ஹா ஹா ஹா.. :))

கீறிப்புள்ள!! said...

@அனாமிகா
/நாலைஞ்சு வாட்டி படிச்சு சிரிச்சுக்கொண்டே இருக்கறேன்//
நன்றிங்க அனாமிகா.. இதத்தான் ஏன் பொழப்பு சிரிப்பா சிரிக்குதுன்னு சொல்லுவாங்க போல.. ஹா ஹா ஹா.. :))

/நல்ல நடை.//
சிவாஜி சார் மாதிரி கம்பீரமவா.. இல்ல சூப்பர் ஸ்டார் மாதிரி ஸ்டைலாவா?? 'Actually வடிவேல் வீட கேவலமான்னு நீங்க சொல்றது கேக்குது... ஹி ஹி ஹி..

/ஓ நம்ம பிளட்டா. கேட்டதுன்னு சொல்லுங்க.//
கண்டிப்பா சொல்லிடறேன்.. ரொம்ப சந்தோச படுவான்.. ஹா ஹா ஹா..

Post a Comment

இத்தனை நேரம் என் கீறலை பொருத்தமைக்கு நன்றிகள் கோடி.. இது நீங்கள் கீறுவதற்கான இடம்.. கொஞ்சம் கீறிட்டு போங்க பாஸு.. :))