Wednesday, March 23, 2011

நண்பர்களின் திருமணத்தில்.. காமெடி, கலாட்டா, ஜொள்ளு!! (Scene 2) + குட்டிச் சாத்தான் Intro!!

Scene 1

இதுல ஒரு புது கேரக்டர்-அ உங்களுக்கு அறிமுகபடுத்தப் போறேங்க.. ரொம்ப நாளா அவன் இம்சை தாங்க முடியல..

"மச்சி ப்ளீஸ் டா.. உன்னோட ப்ளாக்-ல எனக்கொரு சின்ன பார்ட்-ஆவது குடுடா.. ப்ளீஸ் ப்ளீஸ்"-ன்னு கெஞ்சிட்டே இருந்தான்.. சரி நம்மலாலையும் ஒருத்தன் வாழ்ந்தான்னு இந்த சரித்திரம் சொல்லட்டும்ன்னு நானும் ஒத்துகிட்டேன்..

ஆனா முன்னாடியே உங்கள எச்சரிக்கறேன்.. கோர்ட்-ல எல்லாரும் 'நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மையை தவிர வேறெதுவும் இல்லை'-ன்னு, சத்தியம் பண்ற மாதிரி.. அவனுக்கு வேற ஒரு உறுதிமொழி இருக்கு.. 'நான் சொல்வதெல்லாம் பொய்.. பொய்யை தவிர வேறெதுவுமில்லை'-ன்றது தான் அது.. அதனால அவன் சொல்றதுக்கெல்லாம் ப்ளாக் பொருப்பில்லைங்க your Honour.. So here I am introducing, "வெத்து வேட்டு.. வேகாத பருப்பு.. the great.. குட்டிச் சாத்தான்.."
ஹி ஹி ஹி..
குட்டிச் சாத்தான்: மக்களே!! இவன நம்பாதீங்க.. இவன் ஜப்பான்-ல Jackie chan கூப்டாக.. மலேசியா-ல Michael Jackson கூப்டாகன்னு கலர் கலரா ரீல் விடுவான்.. இந்தவாட்டி பதிவுல சரக்கு கொஞ்சம் கம்மி.. அதனால நீ வந்து நடுல கொஞ்சம் "மானே, தேனே, பொன் மானே.. அப்புறம் அலுமினியம் மானே எல்லாம் போட்டன்னா நல்லா இருக்கும்ன்னு கால்ல விழாத கொறையா கெஞ்சி கேட்டுக்கிட்டான்.." அதான் வளர்ற பய்யன் போனா போகட்டும் கொஞ்சம் உரம் போடலாம்ன்னு வந்தேன்!! ஹி ஹி ஹி..

கீறிப்புள்ள: உன்ன 1st ரெண்டு பத்தி முடியறவரைக்கும் ஒன்னும் பேசக்கூடாதுன்னு சொன்னேன்-ல.. போ..

கு.சா. : சரி..சரி.. இந்தக் கதையில் என்னுடைய பாத்திரம் என்னவோ??

கீறிப்புள்ள: ஹேன்ன்ன்.. எவர்சில்வர் அண்டா!! பேசாம ஓரமா போய் நில்லு..போ..போஓஒஒஒஒ!!!

கு.சா. : சதா மாதிரி சொல்றாராமா.. சாதா தோசை சொல்ற மாதிரி இருக்கு..

இந்த சாப்பாடுங்கறது இருக்கே.. அது (கு.சா. : டேய்.. பழமொழி சொல்ல போறியா.. கம் பாக் டு த ஸ்டோரி மேன்)

மதுரைல நடக்கற கல்யாணத்துக்கு போக முந்தின நாள் நைட் ட்ரெயின் ஏறினோம்..(கு.சா. : பின்ன நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு ப்ளைட்லையா டிக்கெட் எடுப்பாங்க.. உண்மைய சொல்லு அந்த டிக்கெட்டுக்கே நீ இன்னும் ரூவா குடுக்கல தான..)

நைட் சாப்பிட வாங்கின பிரியாணிய வாய்ல வெக்க முடியல..
(கு.சா. : அப்ப மூக்குல இல்லன்னா நெத்தியில வெக்க முடியுமா?? இல்ல கொஞ்சம் பொது அறிவ வளத்துக்கலாமேன்னு தான் கேட்டேன்.. ஹி ஹி ஹி..)

கீறிப்புள்ள:  டேய்!! ஏன்டா இப்டி 'ஜோ' அக்கா மாதிரி அஞ்சு ரூவா குடுத்தா ஐநூறு ரூவாய்க்கு கூவற.. அந்த்த சீன் நீகு லேதுலே.. கொன்ச்சம் தக்கவ சேசுகோ நைனா!!

ஒரு பன்னாடை சொல்லிச்சு 'பரவால்ல மச்சி.. நைட் சாப்பிடாம இருந்தா காலைல நல்லா பசிக்கும்.. பந்தியில ஒரு கட்டு கட்டலாம்'-ன்னு.. அப்பவே நாளைக்கு ஏடா கூடமா ஏதோ நடக்க போகுதுன்னு பட்சி சொல்லிச்சு.. பச்சடி பத்தி நினைச்சுட்டு இருக்கும்போது பட்சி சொல்றத யாரு மதிப்பாங்க..

அடுத்த நாள் Train கூவிட்டே மதுரைல லேன்ட் ஆக.. "கில்லி-ல ரயில்வே ஸ்டேசன்-ல முத்து பாண்டி தனலட்சுமியோட அண்ணன மர்டர் பண்ற மாதிரி எதையும் பார்க்காம சீக்கிரமா போனுமேன்னு கூட வந்த கூமுட்ஸ்க்கு எல்லாம் கொஞ்சம் கூட பயமே இல்ல.. அந்த டாங்கீஸ் எல்லாம், எறங்கினோமா கெளம்பினோமான்னு இல்லாம.. பாக்கற எடத்துல எல்லாம் நின்னு, உக்காந்து, படுத்து எல்லாம் போட்டோ எடுத்துட்டு இருந்தானுக..(கு.சா. : ங்கொய்யாலே.. நீ ஒரு போட்டோல கூட இல்லன்னு ப்ரூவ் பண்ணு பாப்போம்.. நான் ஒரு பக்க கொம்ப வெட்டிகறேண்டா..) ஒரு வழியா ஹோட்டல்-க்கு போய் காலைக்கடன் எல்லாம் முடிச்சு எல்லாரும் ரெடி ஆனோம்.. (கு.சா. : அங்க போயும் 'Dove' சோப்பு இருந்தா தான் குளிப்பேன்னு சீன் போட்ருப்பயே..)
டெரர் வண்டி!!
அந்த ஊர்னரதால ஒரு சுமோ செட் பண்ணி ஒரு செட்டப்பா கெட்டப்பா மண்டபத்துக்கு கெளம்பினோம்.. கொஞ்ச தூரம் போன அப்றமா ஒரு வெள்ளை ஸ்கார்பியோ பின்னாடியே பாலோ பண்ணிட்டு ஹார்ன் அடிச்சு, வண்டிய ஒதுக்க சொல்லி சிக்னல் குடுத்துட்டே வந்துட்டு இருந்தது.. வண்டியில "காந்தி அழகிரி-ன்னு" பேர பாத்ததும் கொஞ்சம் டென்ஷன் எகிறிடுச்சு.. ஆஹா பசங்க எவனும் தெரியாம வாய விட்டுடானுகலான்னு பயம் வேற.."சன்மூவம், வண்டிய அடிச்சு ஓட்டுன்னு" அந்த டிரைவர்-க்கு எவ்ளோ சொல்லியும் ஓரமா ஒதுக்கிட்டான்.. "இன்னைக்கு செத்தாண்டா சேகர்-ன்னு" இஷ்ட தெய்வத்தை எல்லாம் நடுங்கிட்டே தொணைக்கு கூப்டுட்டு இருந்தேன்..

கு.சா. : அப்ப அன்னைக்கு சுமோ சீட்-ல சூச்சு நீதானா?? 
"கண்டுபுடிச்சேன்.. கண்டுபுடிச்சேன்.. சூச்சு போனவன கண்டுபுடிச்சேன்.. சிஷ்யா.. சிஷ்யா.. இது சரியா சரியா.. " ஹா ஹா ஹா..

கீறிப்புள்ள: அது பிஸ்லேரி பாட்டில் ஒடஞ்சதுல லீக் ஆன வாட்டர் டா.. அந்த வாட்டர் சத்தியமா என்னோட வாட்டர் இல்லடா..

பாத்தா, அந்த வண்டி எங்கள தாண்டி சீறிட்டு போச்சு.. மதிக்க கூட இல்ல.. (கு.சா. : மிதிக்காம போனாங்கலேன்னு சந்தோஷ படுடா..) அடடா நாம தான் இந்த பாழா போன சினிமா எல்லாம் பாத்து ஓவரா கற்பனை பண்றமோ?? (கு.சா. : அதுல நோக்கு டவுட்டே வேணாம் தலீவரே..ஹி ஹி..) ஒரு வழியா மண்டபத்துக்கு போனோம்.. எல்லாருக்கும் அகோர பசி..
இந்த மாதிரி பெரிய இலை ஒன்னு கொண்டு போல.. அவ்ளோதான்..
கூடவந்த ஒரு நல்லதம்பி: "நேரா பந்திக்கு போனா நல்லா இருக்காது.. வந்ததுக்காக கொஞ்ச நேரம் ஹால்-ல உக்காருவோம்"ன்னான்.. (கு.சா. : இந்த மாதிரி பசங்க கூட எல்லாம் நீ பழக்கம் வெச்சிருக்கியா.. இத்தோட நம்ம பிரண்ட்ஷிப் கட்டு..) யாரவது சாப்பிட கூப்பிடுவாங்கன்னு பாத்தா.. யாருமே அந்த பக்கம் கூட வரல.. சரி, வீரர் வாழ்கையில் வெட்டுக்கள் சகஜம்தானேன்னு நாங்களா சாப்ட எறங்கி போனா.. அங்க வெடிச்சது ஐய்ட்டம் பாம்.. அதே தாங்க!! ஒரு பெரியவர் தழு தழுத்த வாய்ஸ்-ல 'தம்பி ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்திருக்க கூடாதா?? இப்பதாம்ப்பா டிபன் ஐய்ட்டம் எல்லாம் காலி ஆச்சு-ன்னாரு.. (கு.சா. : "பரவால்லைங்க சாமியோவ்.. கொஞ்சம் பழைய சோறு இருந்தா போடுங்க நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்"-ன்னு சொல்ல வேண்டியது தான.. ஹா ஹா ஹா..)

"நைட் சாப்பிடாம இருந்தா காலைல நல்லா பசிக்கும்"..
"நைட் சாப்பிடாம இருந்தா காலைல நல்லா பசிக்கும்"..
"நைட் சாப்பிடாம இருந்தா காலைல நல்லா பசிக்கும்"..
அப்டின்னு அந்த டயலாக் மண்டபம் பூரா எக்கோ எபெக்ட்.. செம கடுப்பு.. அந்த டயலாக் சொன்ன நாதாரிய பாத்ரூம்குள்ள விட்டு கும்மி எடுத்தோம்..

பசியில மண்டபத்துல இருந்த பொண்ணு எல்லாம் நாயர் கடை பண்ணு மாதிரி தெரிஞ்சது.. ஆர்கெஸ்ட்ரா வேற செம சவுண்ட்டு.. கொலை வெறில ஒரு காணக் குயில் எல்லா பாட்டையும் கடிச்சு துப்பிட்டு இருந்தாங்க.. அண்ணா முடியலைங்கண்ணா.. சவுண்ட கொஞ்சம் கொறைங்கன்னான்னு கெஞ்சி பாத்தோம் கதறி பாத்தோம்..ஹுன்ன்ன்ன் ஹும்ம்ம்ம்... அக்கா நாங்க வேணும்னா ஸ்பீக்கர்க்கு மேல போட்டு குடுக்கறோம்.. மீயுட் பண்ணிட்டு என்ன வேணா பாடிக்கோங்கன்னு ஆபர் எல்லாம் குடுத்தோம்.. இருந்தாலும், காதுல இரத்தம் பாக்காம விட மாட்டேன்னு ஒரு முடிவோட இருந்தவங்கள என்ன பண்ண முடியும்.. (கு.சா. : நீ பாடறேன்னு சொல்லியிருந்தேன்னா அவங்க தெரிச்சு ஓடிருப்பாங்க.. ஹா ஹா ஹா..)

சரி வெளிய போய் ஒரு வாய் டீ-தண்ணி சாப்பிடலாம்னா.. மாப்பிள வீட்டுக்காரங்க, பத்து நிமிஷம் இருங்க பொங்கல் ரெடி ஆயிரும்..உப்மா ரெடி ஆயிரும்ன்னு அன்புத்தொல்லை வேற.. நொந்து போய் மினரல் வாட்டர் வாங்கி குடிச்சுட்டு.. வெயிட் பண்ணலாம்ன்னு ஒரு குரூப் உள்ளார போனாங்க.. நானும் பசி தாங்க முடியாத இன்னொரு நண்பனும் எஸ்கேப்.. அங்க பக்கத்துல இருந்த ரோட்டு கடை ஒன்ல இருந்த பசிக்கு இட்லி, தோசை ஆப்பாயில்-ன்னு செம கட்டு கட்னோம்.. :D (கு.சா. :  அதான பார்த்தேன்.. பாம்பு கறி சாப்ட கீறி சாப்டாம இருக்கறதா.. நெவெர்!!)

யப்பான்னு, ஏப்பம் உட்டுட்டே உள்ள போறப்ப லபக்குன்னு புடிச்சு நேரா கொண்டு போய் பந்தியில விட்டுட்டாங்க.. எங்கடா போனீங்கன்னு மத்த அரக்கனுங்க எல்லாம் டவுட்டா கேக்க.. 'இந்த ஊர்ல வந்ததுல இருந்து பிச்சைகாரங்கலையே பாக்கல மச்சி.. அதான் அப்டியே சுத்தி பாத்துட்டு வந்தோம்'-ன்னு ஏதோ அப்போதைக்கு தோணினத சொல்லி தொலைச்சேன்..
(கு.சா. :  சனி உன் நாக்குல சல்சா ஆடிருச்சு போல.. ஹா ஹா ஹா..)

'ஏன் இருக்கற வேலைய விட்டுட்டு, நீ இந்த ஊர்ல பிச்சை எடுக்க வரலாம்ன்னு பாக்கறையா??'
'இல்லடா நாலு எலை தள்ளி அஞ்சாவது எலை-ல தம்மாத்துண்டு எதுவும் கெடைக்குமான்னு போயிருப்பான்'-ன்னு நக்கல் மேல நக்கல் எல்லாம் கேட்டும் கேக்காத மாதிரி, உண்மை தெரியாத வரை சந்தோசம்டா சாமின்னு பந்தியில உக்காந்தோம்.. பாசம் பொங்க பொங்கலை அள்ளி அள்ளி வெச்சாங்க.. மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம கொஞ்சம் கோழி கொத்தற மாதிரி கொத்திட்டு எல்லாரும் எழுந்திரிக்கரப்ப கூடவே போயிட்டோம்..

ஆனாலும் என் கூட வந்தவன நான் பாராட்டியே ஆகணும்.. பதினோரு மணிக்கு அவ்ளோ சாப்ட அப்பறமும் பன்னண்டு மணிக்கு மதிய சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு பாயசம் சூப்பர் மச்சி.. நீ மிஸ் பண்ணிட்டன்னான்.. :O
கு.சா. : ரெண்டு Unlimited மீல்ஸ் வாங்கி அசால்டா சாப்பிடறவங்களுக்கு இதெல்லாம் கால் தூசு.. ஹி ஹி ஹி..

Sunday, March 13, 2011

நண்பர்களின் திருமணத்தில்.. காமெடி, கலாட்டா, ஜொள்ளு!! (Scene 1)


இதுவரை நெறைய கல்யாணத்துக்கு போயிருப்போம்.. அங்க பல நல்ல, கெட்ட, கேடுகெட்ட அனுபவம் எல்லாம் நடந்திருக்கும்.. அதை எல்லாம் நானும் என் நண்பன் சந்தோஷ்-உம் லைட்டா அலாசி துவைக்க போறோம்..

கீறிப்புள்ள: மச்சான்.. நான் ரொம்ப கேவலப்பட்ட situation-டா அது..

சந்தோஷ்: அது எப்பவும் நடக்கறதுதானடா.. இதுல புதுசா என்ன இருக்கு.. ஹி ஹி ஹி..

கீறிப்புள்ள: ரைட்டு விடு.. ஒரு கல்யாண ரிசப்சன் போனா என்னடா பண்ணுவோம்..

சந்தோஷ்: லுக் விடுவோம்...

கீறிப்புள்ள: அப்றம்..

சந்தோஷ்: கிப்ட் குடுப்போம்...

கீறிப்புள்ள: அப்றம்..

சந்தோஷ்: நல்லா சாப்பிடுவோம்..

கீறிப்புள்ள: அப்றம்..

சந்தோஷ்: அப்புறம் கிளம்பிடுவோம்!!

கீறிப்புள்ள: இல்லடா.. இந்த லுக் விடறதுக்கும் கிப்ட் குடுக்கறதுக்கும் நடுல.. நடுல ஒன்னு பண்ணுவோமே?? அது, என்ன?? என்ன??

சந்தோஷ்: ஏன்டா இப்டி 'கல்கி'ல பிரகாஷ் ராஜ், 'கீதா-வ' டார்ச்சர் பண்ற மாதிரி நீ என்ன டார்ச்சர் பண்ற..

கீறிப்புள்ள: கொஞ்சம் யோசிடா.. ரெண்டுத்துக்கும் நடுல.. நடுல..

சந்தோஷ்: ஐயோ.. ஆண்டவா.. முடியலடா.. வேணாம்! விட்டுடு!! அழுதுருவேன்!!!

கீறிப்புள்ள: சரி விடு.. நானே சொல்றேன்..

சந்தோஷ்: இல்லைன்னா மட்டும் விடவா போற..

கீறிப்புள்ள: அதாண்டா.. மேடைக்கு போய் கை குடுத்து.. Many more happy returns of the day.. இது சாரி.. Happy married life.. எல்லாம் சொல்லுவோம்ல..

சந்தோஷ்: நீ மொதல்ல சொன்னது மட்டும் சொல்லிருந்த.. செத்தடியோய்!! ஹா ஹா ஹா..

கீறிப்புள்ள: சரி.. சரி.. அத ஃப்ரீயா விடு.. அன்னைக்கு நாங்க மேடைக்கு போனப்ப.. என்ன ஆச்சுன்னா.. (நான் அப்டியே மேல பாக்க..)

சந்தோஷ்: அது ஏன்டா ப்ளாஷ் பாக் சொல்லும் போது மேல பாத்து தான் சொல்லனும்ன்னு ஏதாவது லா இருக்கா, என்ன.. நார்மலா இருங்கலேன்டா..

கீறிப்புள்ள: சாரிடா.. கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்.. அன்னைக்கு எனக்கு முன்னால போன மூதேவி, கை குடுக்கறப்ப பொண்ணோட கைய நல்லா புடிச்சு நசுக்கிட்டான் போல..

சந்தோஷ்: ஏன்டா.. அப்டி சொல்ற..

கீறிப்புள்ள: அவனுக்கு அடுத்ததா பின்னாலையே முன்னாடி போன நான், ஈ-ன்னு வழிஞ்சுட்டே பணிவா குனிஞ்சு கைய குடுக்க, அந்த பொண்ணு கொஞ்சம் முறைச்சுட்டே வணக்கம் சொல்ல.. உலகமே அப்டியே ஸ்டாப் ஆயிட்டு..

சந்தோஷ்: ஹா ஹா ஹா.. வெயிட்.. வெயிட்.. உனக்கு தான் அநியாயத்துக்கு கூச்ச சுபாவமாச்சேடா.. யாராவது பொண்ணு தடுக்கி விழுந்தா கூட தாங்கி பிடிக்க கூச்சப்பட்டுட்டு தள்ளி நிப்பையே.. அன்னைக்கு கூட அந்த சுசிலா அதுக்குதானே உன்னை அடிச்சா.. ஹா ஹா ஹா..

கீறிப்புள்ள: இல்லடா.. அப்ப கூட சுசி கோவமா பாத்தாலே தவிர அடிக்கல..

சந்தோஷ்: அப்புறம் வேற எதுக்கு அடிச்சா..

கீறிப்புள்ள: சுசிலா கீழ விழுந்ததுல டிரஸ் எல்லாம் அழுக்கு ஆயிருந்துச்சா.. "ஐயோ!! ச்சுச்சுச்சூ.. Surf Excel இருக்கில்ல சுசி-ன்னு கேட்டேன்".. அதான் உட்டா ஒன்னு பொலேர்ன்னு..

சந்தோஷ்: ஹா ஹா ஹா.. அடப்பாவி.. உன்னால மட்டும் தான்டா இதெல்லாம் முடியும். சரி இந்த சீன்-க்கு திரும்ப வா.. ஏன் கை குடுத்த..

கீறிப்புள்ள: அதான் சொன்னேனேடா முன்னால போன மூதேவி குடுக்க.. நானும் ஒரு ஃப்லோ-ல குடுத்துட்டேன்..

சந்தோஷ்: ஹா ஹா ஹா.. சரி.. சரி.. அப்றம் என்ன ஆச்சுன்னு சொல்லு..

கீறிப்புள்ள: அப்றம் என்ன.. இந்த 'பாய்ஸ்' படத்துல 'எகிறிகுதித்தேன்' அப்டின்னு ஹீரோ ஹீரோயின் ஜம்ப் பண்ணி ஏர்-ல இருக்க கேமரா 360-டிகிரில கவர் பண்ணுமே.. அதேமாதிரி எங்கள சுத்தி எல்லா angle-லயும் கேமரா rotate ஆகற மாதிரி ஒரு பீலிங்..

சந்தோஷ்: டப்புன்னு.. நீயும் வணக்கம் சொல்லிட்டு அந்த பக்கம் போக வேண்டியதுதானேடா..

கீறிப்புள்ள: என்னடா நீ.. தெரியாத மாதிரி கேக்கற.. என்னோட ரியாக்சன் டைம் தான் பயங்கர fast ஆச்சே மச்சி..

சந்தோஷ்: அட ஆமால்ல.. படத்துல ஹீரோ ஸ்லோ மோசன்-ல திரும்புற மாதிரிதான உன்னோட நார்மல் ஆக்சனே இருக்கும்.. ஹா ஹா ஹா..

கீறிப்புள்ள: ஹும்ம்ம்ம்ம்ம்.. :(

சந்தோஷ்: விடு.. விடு.. அப்புறம் என்ன ஆச்சு..

கீறிப்புள்ள: அப்புறம் என்ன.. ரெண்டு பேரும் அதே போஸ்-ல அப்பிடியே சிலை மாதிரி நிக்க.. ஊரே தப்பட்லு கொட்டி நவ்விந்தி..

சந்தோஷ்: டேய்.. என்னடா.. டென்ஷன்-ல தெலுகு-ல மாட்லாடற(பேசற).. மொதல்ல அந்த ஆந்திரா அம்மாயி(பொண்ணு) பொம்மாயி கிட்ட கடலை போடறத நிறுத்து..

கீறிப்புள்ள: மவனே! நீ இப்ப நிறுத்தல நான் செகுனில விடப்போறேன் பாரு.. எவ்ளோ பீலிங்ஸோட சொல்லிட்டு இருக்கேன்.. அம்மாயி.. பொம்மாயின்னுட்டு..

சந்தோஷ்: .........

கீறிப்புள்ள: எங்க-வுட்டேன்..

சந்தோஷ்: செகுனில..

கீறிப்புள்ள: அதில்லடா.. ஆங்.. தப்பட்லு கொட்டினது-ல.. ச்சை.. ஊரே கை கொட்டி சிரிச்சது.. பயங்கர ஷேம் ஷேம்டா..

சந்தோஷ்: .......

கீறிப்புள்ள: என்னடா நான் இவ்ளோ சொல்றேன் நீ ஏதோ சீரியசா யோசிச்சிட்டு இருக்க..

சந்தோஷ்: இல்ல மச்சான்!! கை குடுத்தேன்னு சொன்னியே.. சோத்தாங் கை குடுத்தியா இல்ல பீச்சாங் கை குடுத்தியான்னு தான்.. ஹா ஹா ஹா..

கீறிப்புள்ள: ஆங்.. யானை தும்பிக்கைய குடுத்தாங்க.. போடா டேய்!!

சந்தோஷ்: சரி சரி..டென்ஷன் ஆகாத.. இதெல்லாம் நடந்தனால நீ கல்யாணத்துல சாப்பிடாம வெளி நடப்பு செஞ்சிட்டயா..

கீறிப்புள்ள: அதெப்டிடா..

சந்தோஷ்: அப்றம் வேற என்னதான்டா செஞ்ச..

கீறிப்புள்ள: அப்டி கேளு.. கேட்டா ஆடி போயிருவ.. எப்பவும் அஞ்சு இட்லி சாப்பிடறவன்டா நானு.. ஆனா அன்னைக்கு அவங்கள பழி வாங்கறதுக்கு பத்து இட்லி சாப்டோம்ல.. கார சட்னி சூப்பர்!!

சந்தோஷ்: மானங்கெட்டவன்டா நீ... காரமா ஏதும் பண்ணிருப்பன்னு பாத்தா கார சட்னி பத்தி பேசறியேடா.. சரி அந்த மேட்டர சொல்லிரு....

கீறிப்புள்ள: நெஜமாடா!! அவ்ளோ தாண்டா சாப்டேன்..

சந்தோஷ்: அதில்லடா.. இது வேற ஐட்டம்-டா..

கீறிப்புள்ள: சரி ஒத்துக்கறேன்.. அப்புறம் ரெண்டு கப் ஐஸ் கிரீம் சாப்டேன், ரெண்டு கப் பாதாம் பால் குடிச்சேன்.. போதுமா..

சந்தோஷ்: அத சொல்லல டா.. மக்கள் எல்லாரும் நீ சொல்ற மொக்கை மெசேஜ்-க்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. சீக்கிரமா சொல்லி முடிச்சன்னா அவங்க அடுத்த ப்ளாக்-க்கு போவாங்கல்ல..

கீறிப்புள்ள: இந்த மானங்கெட்ட மேட்டர்-ல என்னடா மெசேஜ் சொல்றதுக்கு இருக்கு.. இருந்தாலும் சொல்றேன்..

மக்களே!! இதனால உங்களுக்கெல்லாம் சொல்லவர்றது என்னன்னா.. மாப்பிள்ளையையும் பொண்ணையும் எவ்ளோ தான் தெரிஞ்சிருந்தாலும் கை குடுக்கறது, கட்டிப்புடிக்கறது இதெல்லாம் பண்றதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு 10 20 times நல்லா யோசிச்சிட்டு பண்ணுங்க.. (ஏன்னா "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்".. ஹி ஹி ஹி..) இல்லையென்றால் அப்போதும் இப்போதும் எப்போதும் நம் பாரம்பரியமான வணக்கத்தை சொல்லுவோம்.. என்று வணக்கம் கூறி உங்களிடம் இருந்து விடை பெறுவது கீறிப்புள்ள & சந்தோஷ். :))

Photo 1: Harry potter..எந்த பார்ட்-ன்னு தெரில.. தெரிஞ்சப்புறம் சொல்றேன்.. :))
Scene 2: எப்போ ரெடி ஆகும்ன்னு தெரில.. Scene 1, நல்லா இருக்கா இல்லையாங்கறத பொருத்து.. :))

Scene 2 போட்டாச்சு :))

Tuesday, March 8, 2011

வெளிநாடு செல்லும் நம்மவர்கள்.. பப்ளிக்-ல உம்மாவா?? 2nd part!!

முதல் ஆறு மொக்கையை படிக்க இங்கே கிளிக்கவும்!!

7. மன்னன் படத்துல ரஜினி-யும், கவுண்டரும் சின்ன தம்பி படத்துக்கு கத்தி, ஆசிட் எல்லாம் காட்டி டிக்கெட் வாங்குறது ஒரு காமெடி-க்காக.. அதையே வேதமா எடுத்துட்டு அந்த நாட்ல க்கீயு ஜம்ப் பண்ணக்கூடாது.. அங்கல்லாம் க்கீயு ஜம்ப் பண்றது ரொம்ப ரொம்ப அநாகரீகமா கருதப்படும்.. நீங்க சில சமயம் தர்ம அடி வாங்க வேண்டி வந்தாலும் வரலாம்.. இதுவரை வாங்கலைன்னா பூர்வ ஜென்ம புண்ணியம்ன்னு நெனச்சுக்கோங்க.. For Ex: சூப்பர் மார்க்கெட்-ல நீளமான க்கீயு இருக்கறப்ப நீங்க ஒன்னு ரெண்டு பொருள் மட்டும் வாங்கற மாதிரி இருந்தா, (அதுக்குன்னு தனி க்கீயு இல்லாதபட்சத்தில்) முன்ன இருக்கறவங்க கிட்ட ஒரு "ப்ளீஸ்.." போட்டு கேட்டீங்கன்னா அவங்களே விட்டுக்கொடுத்திருவாங்க..


8. அந்த நாட்டு மக்களின் உடைகள் பேஷன் என்ற பேரிலோ கஞ்சத்தனத்தினாலோ கம்மியா இருக்க வாய்ப்பு இருக்கு.. அதுக்காக நம்ம ஊர்ல போஸ்டரையே திங்கற மாதிரி பார்க்கறது போல, அங்க போய் கலியுக துச்சாதனனா கண்ணாலேயே துகிளுரிக்கக் கூடாது.. "Staring is bad manners" உங்க வீட்ல சொல்லிதரலயான்னு பேச்சு வாங்க வேண்டி வரும்..
இதுக்காகவே ஸ்விம்மிங் பூல் போறவங்களும் ஜாக்கிரதை.. ஒரு சில நாட்ல, மொறைச்சு பாத்ததுக்கு போலீஸ்-ல கூட கம்ப்ளைன்ட் பண்ணலாம்.. கெடச்ச சந்துல ரோட்ட கிராஸ் பண்ணாலே பைன் போடறவங்க.. நீங்க வேற லைன் ஏதும் கிராஸ் பண்ணா என்ன ஆகும்ன்னு யோசிங்க.. நல்லா யோசிங்க!! சொல்றது நம்ம கடமை.. அப்புறம் உங்க இஷ்டம்..

9. நம்ம ஊர்ல ரெண்டாயிரம் ரூபாய்க்கு சாப்டாலும் ரெண்டு ரூபா தான் டிப்ஸ் வெச்சுட்டு போவாங்க.. சர்வர் மனசுக்குள்ள எல்லா பேட் வோர்ட்ஸ்-லயும் திட்டிட்டு போவான்.. அதனால நீங்க இருக்கற நாட்ல பில் அமௌன்ட்-ல எவ்ளோ சதவிதம் டிப்ஸ் வெக்கனுங்கரத தெரிஞ்சுக்கோங்க.. இல்லன்னா கூட வந்தவங்க கஞ்ச பயன்னு நெனைக்க வாய்ப்பிருக்கு..

10. சத்தமா பேசறது நம்ம மக்களுக்கு சாதாரணம்.. அது நம்ம ஊர்ல இருக்கறப்ப சில சமயம் கடுப்பா இருந்தாலும் யாரும் கண்டுக்கறதில்லை.. ஆனா வெளிநாட்ல அத ரொம்பவே தப்பா எடுத்துக்க வாய்ப்பிருக்கு.. அந்த நாட்டு மக்கள் பொது எடத்துல போன் பேசறதும் தெரியாது வெக்கறதும் தெரியாது.. ஆனா நம்ம ஆளுங்களுக்கு போன் தேவையே இல்ல, இங்க பேசற சத்தம் அங்கன நேராவே கேட்ரும் மத்தவங்களுக்கு காது ஜவ்வு அந்து போகும்..

11. கண்ட எடத்துல குப்பை போடறது, அப்புறம் நம்பர் ஒன் போறது எல்லாம் ரொம்ப ரொம்ப தப்பு.. மாட்டினா பைன்-ஓட சேத்தி பப்ளிக் டாய்லெட் கூட கிளீன் பண்ண வேண்டி வரும்..
அப்புறம் அங்க எல்லா எடத்துலயும் வெஸ்டேர்ன் ஸ்டைல் தான்.. எனக்கு இந்தியன் ஸ்டைல்ல போனாதான் வரும்ன்னு ஏறி உக்காந்து ஒடச்சுராதீங்க.. பொழப்பு நாறிடும்.. ஹி ஹி ஹி.. உடனே அனுபவம் பேசுதுன்னு எல்லாம் நக்கல் பண்ணக்கூடாது.. எல்லாம் காத்தோட வர்ற சேதி தான்.. ஹி ஹி ஹி..


12. வீட்ல வளக்கற நாய், பூனை இதெல்லாம் அவங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி.. அதனால இங்க நாய கண்டா கல்ல-வுட்டு அடிக்கற மாதிரி அங்க ஏதும் ஏடாகூடமா பண்ணீங்க அவ்ளோதான்.. மேட்டர் ஓவர் மோனே தினேஷா!!

இதில் பெரும்பாலானவை நம் நாட்டில் மிகவும் சாதாரணம் தான்.. அத இங்க செஞ்சா "எப்டி போறான் பாரு பரதேசி"-ன்னு திட்டுவாங்க.. ஆனா இதையே நீங்க அங்க செஞ்சா "எப்டி போறான் பாரு ஒரு 'இந்திய' பரதேசி"-ன்னு நம்ம நாட்டையும் சேத்தி திட்டுவாங்க.. நம்ம நாட்ட அவங்க நல்ல விதமாவோ இல்ல கெட்ட விதமாவோ பாக்கறது, நீங்க பண்ற ஒவ்வொரு சின்ன விசயத்துல தான் இருக்கு..

டிஸ்கி 1- அட இப்படி எல்லாம் இருக்கான்னு சிலர் உணர்ந்தா அதுவே போதும்..

டிஸ்கி 2- யார் என்ன சொன்னாலும் நாங்க இப்டியே தான் இருப்போம் சங்கம்.. ஒன்னும் சொல்றதுக்கில்லைங்கன்னா!!

டிஸ்கி 3- எல்லா போட்டோ-வும் கூகிள்-ல சுட்டது.. ஹி ஹி ஹி..

வெளிநாடு செல்லும் நம்மவர்கள் செய்யும் தவறுகள்!! பப்ளிக்-ல உம்மாவா?? ;)

இந்தியா மானத்தை காப்பாத்த யாரையும் தலைகீழா சம்மர் அடிக்க சொல்லலீங்க.. கொஞ்சம் பருப்போட.. ச்ச.. பொருப்போட நடந்துகிட்டா போதும்..எல்லாரும் பெரும்பாலும் சம்பாதிக்க தாங்க போறது.. ஆனா அதுக்காக பிறந்து வளர்ந்த தாய் நாட்டு மானத்தை வாங்கனுமா?? இதெல்லாம் தப்புன்னு தெரியாமையும்,அதனோட முழு விளைவுகள் புரியாமையும் பல பேர் இத பண்ணிட்டு இருக்காங்க..

1. எல்லா கம்பெனி-லயும் வெளிநாட்ல நாம செஞ்ச செலவுக்கு பில் குடுத்தா அத திரும்ப குடுத்திருவாங்க.. இந்த பொய் கணக்குபுள்ளைங்க பண்ற மானங்கெட்ட வேலை இருக்கே..  நான் முதல் முதலில் இதனால வாங்கின செருப்படி.. அது அந்த நாட்டில் இருக்கும் ஒரு பிரபலமான இந்திய ஹோட்டல்.. ஒரு ஆபீஸ் பார்ட்டி-க்காக அந்த நாட்டு பசங்க சிலரும் நம்ம ஊரு கிங்கரர்களும் போயிருக்காங்க.. பில் நம்ம நாட்டு பணத்துல ஒரு நாற்பதாயிரம் வந்திருக்கும்.. ஆனா பில்லுக்கு பணம் குடுத்தது அந்த ஊர் பசங்க.. சரின்னு எல்லாரும் கெளம்பியாச்சு.. கொஞ்ச நேரத்துல கிங்கரர்கள் திரும்ப வந்து பில் காப்பி ஒன்னு கெடைக்குமான்னு கேட்டு வாங்கிட்டு போயிருக்காணுக.. என்ன ஈனப் பொழப்பு இதெல்லாம்!!

நான் அந்த ஹோட்டல்-க்கு சாப்பிட போனப்ப அந்த முதலாளி இந்தக் கதைய சொல்லிட்டு.. உங்களுக்கு கூட பில் ஏதும் அதிகமா வேணும்னா சொல்லுங்க இதெல்லாம் உங்க நாட்ல நடக்கறதுதானேன்னு சிரிச்சான்.. கேவலமா இருந்தது.. ஒரு நாற்பதாயிரம் ரூபாய்க்கு நாட்டையே வித்துட்டானுகளே.. அதுக்கு மேல அங்க ஒரு வாய் கூட சாப்பிட முடியல.. பில்லுக்கு பணம் குடுத்திட்டு "Not everybody from my country are cheap like that" அப்டின்னு வாங்கினதுக்கு கொஞ்சமேனும் திருப்பி குடுத்திட்டு கெளம்பிட்டேன்!!

2. வெளிநாட்ல பஸ், ட்ரெயின் எல்லாமே AC போட்ருக்கும்.. அதனால காற்றோட்டம் இருக்காது.. அந்த நேரத்துல உங்க வியர்வை மனம்கொண்ட அக்குளை கொண்டு போய் அந்த நாட்டுகாரங்களோட மூக்குல வெச்சா.. நாத்தம் புடிச்ச நாட்டுகார(ரி)ன்னு தான் சொல்லுவாங்க.. அதனால ஒரு நல்ல டியோடரன்ட் use பண்ணுங்க.. :))


3. தலைக்கு என்னை வெக்கறது நல்ல பழக்கம் தான்.. அதுக்காக ஒரு ஊருக்கே போடற அளவுக்கு வெச்சுட்டு போய் அடுத்தவன் டிரஸ்-ல எல்லாம் தேச்சுட்டு இருக்கக்கூடாது!!

4. Dutch Treat போகலாமான்னு கேட்டா.. Dutch Hotel-க்கு கூட்டிட்டு போய் சரக்கு வாங்கி தரப்போரான்னு, நாக்க தொங்க போட்டுட்டு போய் மூக்கு முட்ட குடிச்சுட்டு பில்-லுக்கு பணம் கேட்டா.. Treat-ன்னு சொல்லிட்டு மானங்கெட்டவன் பணம் கேக்கறான்னு அவன திட்டக்கூடாது.. Dutch treat-ன்னா பில் எவ்ளோ ஆனாலும் எல்லாரும் சமமா பிரிச்சு பணம் குடுக்கறதா இருக்கலாம்.. இல்லன்னா யார் எவ்ளோ சாப்டாங்களோ அதுக்கு அவங்களே பணம் குடுக்கணும்.. எதுன்னு சரியா தெரிஞ்சுட்டு போறது நல்லது!!


5. அந்த நாட்ல பப்ளிக்-ல உம்மா குடுக்கறது எல்லாம் சாதாரனமா இருக்கும்.. அதனால கொட்ட கொட்ட அதையே பாத்துட்டு இருக்கக்கூடாது.. லைட்டா ஓரக்கண்ல பாத்தும் பாக்காத மாதிரி போயிட்டே இருக்கணும்.. ;)))

அங்க வந்த நம்ம ஊர் ஜோடி ஒன்னு.. இத ட்ரை பண்ணிட்டு இருக்க.. நான் எதேச்சையா(சத்தியமாங்க) திரும்பி பார்க்க.. நான் பாத்தத அவங்க பாக்க..டப் டுப்புன்னு ரெண்டு பேரும் விலகி போக.. எல்லாருக்குமே ஒரே பப்பி ஷேம்.. நமக்கு தான் வரலியே.. அப்புறம் எதுக்கு இந்த வீண் விளம்பரம்.. இதெல்லாம் தேவையா மக்களே!!


6. நம்ம ஊர்ல ஆபீஸ் போயி காபி மொக்கை, லஞ்ச் மொக்கை, மதியம் டீ மொக்கை எல்லாம் போடற மாதிரி அந்த ஊர்ல பண்ணாதீங்க.. அவங்களுக்கு கலீக்ஸ் வேற நண்பர்கள் வேற.. அதனால வேலை நேரத்துல பேய் மாதிரி வேலைய மட்டும் பாத்துட்டு போயிகிட்டே இருப்பாங்க.. நடுல நீங்க போய் தேவை இல்லாம பேசினா தொந்தரவா தான் எடுத்துப்பாங்க.. சூதானமா இருக்கோணும்!!

 மற்றவை அடுத்த பகுதியில்.. இன்னும் மொக்கை முடியலையாடா சாமின்னு எல்லாம் சலிச்சுக்கப்பிடாது.. ஹி ஹி ஹி..