Monday, September 13, 2010

திருடாதே! பாப்பா திருடாதே!!


Mostly எல்லா office-ளையும் நமக்குன்னு Files/Print outs மாதிரியான items வெக்க  cup-board குடுத்திருப்பாங்க.. ஆனா முக்கால்வாசி பேர் இத files வெக்கறதத்தவிர  மத்ததுக்கு மட்டும்  தான் use பண்றோம்.. சில Ladies & Girls பாத்தீங்கன்னா அவங்க Lip stick, Face wash, Moisturiser, Foundation cream-ன்னு அவங்க make-up kits வெக்க use பண்ணுவாங்க.. அப்புறம் சில பேர் Corn flakes, Oats அப்டின்னு break fast items வெச்சிருப்பாங்க.. இன்னும் சிலர் Cigarette, வத்திபொட்டின்னு Cancer items... இதுவரைக்கும் Johnny Walker-உம், Jack Daniels-உம் தான் நான் அதுல பாத்ததில்ல..

And most of us do not lock the cupboard as we might endup losing the key or we are just lazy.. So very often we see things disappearing.. I have lost some Sodexho passes and some other things..

அதெல்லாம் பரவாயில்லைங்க.. ஆனா களவாணி பசங்க போயும் போயும் Chikki (அதாங்க நம்ம ஊர் கடலை பருப்பி) கூடவா திருடுவாய்ங்க.. நான் அவர்களை மரியாதையுடனும்  பணிவன்புடனும் கேட்கிறேன் 'ஏன்டா மானம் கெட்டவனுகளா! கடைக்காரர்ட்ட போய் 2 ரூவா குடுத்தா ரெண்டு Chikki-டா.. முழுசா ரெண்டு Chikki தருவாருடா.. இத்த கூடவாடா திருடுவீங்க..' Its a Bloody robbery-ன்னு மனசு 'மனிஷா கொய்ராலா' range-க்கு கொந்தளிச்சது.. மனிஷா கொய்ராலா-க்கும் மனசு கொந்தளிக்கரதுக்கும் என்ன relation-ன்னு கேக்கறீங்களா.. ரெண்டுமே 'ம-ன & கொ-ன' அவ்ளோதான் நான் சொல்லுவேன்  ;)

இதுக்கு அப்புறமாதான் Team-ல விசாரிச்சு பார்த்தா நெறைய drawer-ல (கோடு போட்ட Under-drawer இல்லிங்க..Table drawer-ல) இருந்து நெறைய காணாம போயிருக்கு.. Biscuit packet-ல number of biscuits கம்மி கம்மியா இருக்காம்.. Chips packet வெச்சிருந்தா மீதி வெறும் packet -தான் இருக்காம்.. இப்டி நெறைய valuable items எல்லாம் திருட்டு போயிருக்குன்னு எங்க Crime  branch-க்கு data மேல data-வா வந்துச்சு.. Because of these kind of notorious acts the safety inside the office for our personal belongings were subject to the market risk... :-(   இத பத்தி கலந்தாலோசிச்ச  எங்க committee.. ஒரு முடிவுக்கு வந்துச்சு.. இனிமேல் இந்த மாதிரி valuable items எல்லாம் மிச்சம் வெக்கவே கூடாதுன்றது-தான் அந்த முடிவு.. By EOD (End of Day) வேலைய முடிக்கறமோ இல்லையோ இந்த items எல்லாத்தையும் கண்டிப்பா finish பண்ணிட்டுத் தான் வீட்டுக்குப் போகணும்ன்னு எல்லாரும் 'Drawer மேல் ஆணை' எடுத்திருக்கோம்!! :D

இத பத்தி நானும் என்னோட நண்பன் Dk-உம் discuss பண்ணிட்டு இருந்தப்ப, அவன் சொன்னது உங்கள் பார்வைக்கு.. அவங்க Department-ளையும் ஏதோ RAM, Printer Cartridge இந்த மாதிரி சின்ன சின்ன சில்றை items எல்லாம் திருட்டு போயிருமாம்.. (எங்களோட valuable items எங்க.. இவங்க எங்கன்னு நெனச்சுகிட்டேன்!! அப்புறம் தான் எங்க range-க்கு கொஞ்சம் ஏறி  வந்தான்..) Pena.. Pencil.. Rubber..மாதிரி பெரிய பெரிய items-உம்.. Sports items like Shuttle corks, Tennis balls எல்லாம் கூட காணாமப் போயிருச்சாம்.. இத பத்தி கண்டிப்பா அடுத்தக் குழு  கூட்டத்துல (Team Meeting) பேசனும்ன்னு முடிவு பண்ணாங்களாம்.. இங்க 'Cut' பண்றோம் குழு கூட்டத்துக்குப் போறோம்..

குழு  கூட்டத்துல:
எல்லாம் ஒவ்வொரு item-ஆ இத காணம், அத காணம்ன்னு சொல்லிட்டே வர.. நடுல ஒரு Gap.. எல்லாரும் ஒரே silence.. Damager (Manager) என்னடா சத்திய சோதனை இது.. இத யாருக்கு assign பண்ணலாம்னு சிந்திச்சிட்டு இருக்க.. ஒரு புள்ளைக்கு திடிர்ன்னு என்னவோ strike ஆக.. நல்லா சத்தமா,
Girl: "Haan.. Dk's balls were also stolen!!" (புரிஞ்சவங்க எல்லாம் ஒதட்ட கடிச்சுட்டு சிரிப்ப அடக்கியும் அடக்க முடியாம light-ஆ சிரிச்சுட்டும் இருக்க)
Dk: (பதறிப்போய்) "No! No! Thats only my Tennis balls!!"
அவ்ளோ தான்.. அடக்கி வெச்ச மொத்த பேரும் வெடிச்சுட்டாங்க.. :D பாதி பய கீழ பொறண்டு பொறண்டு சிரிக்கராணுவ.. இதத்தான் ROFL-ன்னு (Rolling On the Floor Laughing) சொல்லுவாங்க  போல!!

Thursday, September 2, 2010

வருது!! வருது!! விலகு விலகு!! - பாகம் II


IInd part எழுத ரெம்ப நாள் ஆயிருச்சு.. என்னங்க பண்றது வேலை பண்ற மாதிரி நடிக்கறதுல பயங்கர பிஸி..ஹி ஹி ஹி :P சரி கதைக்கு போவோமா..

‘வந்தா போய்த்தான் ஆகணும்.. போனா வந்துதான ஆகணும்!!' So போன இவர் Final-ஆ வெளியில வந்தாரு.. Bike-ல உக்கார முடியுமான்னு கேட்டேன்.. இவரும் தலைய ஆட்ட.. உள்ள கொஞ்சம் tension-ஓடதான் வண்டிய எடுத்தேன்.. பின்ன, போகும்போது ‘முன்ன-பின்ன’ மறுபடியும் ஏதும் பிரச்சனை ஆயிட்டா.. (Bike + நான்) ரெண்டு பேருமே ‘Water-wash’ போகணுமே.. ஆனா அந்த மாதிரி அசம்பாவிதம் எதுவும் நடக்காம we reached hospital.

போன part-ல ஒரு “Ward boy” கிட்ட பேசினேன்னு சொன்னேனில்லையா.. Actually he isn’t a Ward boy-ங்க.. அவருதான் அங்க நைட் டுட்டி டாக்டர் ஆமா!! சரி இன்னைக்கு அந்த God-தான் இவர காப்பாத்தணும்ன்னு நெனச்சுட்டு உள்ளார போனோம்..

போனவுடனே இவரு பயங்கரமா சத்தம் போட ஆரம்பிச்சுட்டார்..  'Doctor Acute pain.. ரொம்ப வலிக்குது..' English-ல சொன்னதையே திருப்பி தமிழ்ல repeat sound வேற.. (மேஜர் Sundarrajan மாதிரி) 'Do something doctor.. ஏதாவது பண்ணுங்க டாக்டர்..' டாக்டர் பொறுமையா என்ன ஆச்சுன்னு கேட்டாரு.. எல்லாம் விளக்கி சொன்ன அப்றமா.. BP check பண்ணிட்டு.. Low BP admit பண்ணனும்ன்னு சொல்லிட்டு.. Paper-ல சுத்தி சுத்தி ஏதோ எழுதி Nurse-க்கு signal காட்டி அத குடுத்தாரு..

அந்த Nurse-அக்கா என்கிட்ட வந்து சினிமா-ல வர்ற மாதிரி “இந்த சீட்டுல இருக்கற மருந்து எல்லாம் உடனே வாங்கிட்டு வாங்க” அப்டின்னாங்க.. 'இந்த நேரத்துல.. Medical shop.. எங்கன்னு??' நான் திரு திருன்னு முழிக்க.. "என் பின்னாடியே வாங்க!!" அப்டின்னு விரு விருன்னு போனாங்க.. உள்ளயே attached bathroom மாதிரி இருந்த குட்டி ரூம் கதவ அந்தக்கா தட்ட.. Door open ஆச்சு.. அது actual-ஆ ஒரு attached Medical shop.. அடிப்பாவி அக்கா!! இத நீயே வாங்கி இருக்கலாமே.. Simple matter-க்கு அப்டி ஒரு serious scene தேவையா-க்கா.. Medicine/Drips எல்லாம் வாங்கி குடுக்க..

ஒரு Nurse Drips stand எடுத்து எல்லாம் ready பண்ணாங்க.. இன்னொரு அக்கா ஏதோ Injection ready பண்ணி  இவருக்கு போட்டு விட்டாங்க.. Drips start பண்ண அப்றமாதான் இவருக்கு கொஞ்சம் normal-ஆ பேச முடிஞ்சது..

Doctor என்கிட்ட கேட்டாரு "எந்த ரூம்-ன்னு choose பண்ணிட்டீங்கன்னா அங்க move பண்ணிடலாம்.." என்னடா hotel-ல ரூம் choose பண்ற மாதிரி சொல்றாரேன்னு யோசிச்சுட்டே.. எவ்ளோ நாளைக்கு admit ஆகவேண்டி இருக்கும்ன்னு கேட்டேன். அப்ப பாத்து இவரு நடுல "Doctor!! நாளைக்கு காலைல பத்து மணிக்குள்ள எல்லாம் discaharge பண்ணிருங்க.. Market (Share Market) open ஆயிரும்.." Doctor அப்டியே ஒரு look விட்டாரு..(இங்க நான் Doctor-ஆ இல்ல நீயான்ற range-க்கு) அந்த கலவரத்துலயும் வந்த சிரிப்ப அமுக்கிட்டு நானும் இன்னொரு ரூம் மேட்-உம் reaction இல்லாம நின்னோம்..

இந்தவாட்டி Nurse-ஓட chance போல 'General ward-ஆ illa Special ward-ஆன்னாங்க!!' ( என்ன கொடுமைடா இது சாதா தோசையா இல்ல Special தோசையான்னு order எடுக்கறாங்களே.. Serious-ஆ இது Hospital-ஆ இல்ல Hotel-ஆ??) சரி எதுக்கு கூட்டத்துலன்னு Special (Dosai)ward order பண்ணேன்.. அடுத்த கேள்வி Tv இருக்கறதா இல்ல TV இல்லாமையா..(Mind voice-ல: டேய் நாதாரிகளா ஏதோ ஒரு ரூம்-ல கொண்டு போய் விடுங்கடா.. இது ரொம்ப முக்கியமா இப்ப.. மணி மூணு ஆச்சுடா நான் முடிச்சுட்டு போய் தூங்கனும்டா) TV இல்லாமையே குடுங்க..

ஒரு வழியா ரூம் finalise பண்றப்ப.. டாக்டர் இன்னும் கொஞ்சம் மருந்து எழுதி குடுத்தாரு.. அந்த attached bathroom பையன மறுபடியும் எழுப்பி மருந்து அப்புறம் கூடவே ரெண்டு Water bottle எல்லாம் வாங்கிட்டு போய் அவர ரூம்-ல settle பண்ணோம்.. சரி இப்பவாச்சும் கெளம்பலாம்ன்னு பாத்தா.. யாராவது ஒரு ஆள் கூடவே துணைக்கு இருக்கனும்ன்னு அந்த Nurse சொல்ல..(ஏன் நீங்க இல்லையா :P) இவரோட ஒரு friend-க்கு எப்பவும் Afternoon shift.. So அவர கூப்பிட்டு situation explain பண்ணி வர்ற வரைக்கும் wait பண்ணோம்.. எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு திரும்ப வர்றப்ப மணி நாலு அடிக்க இன்னும் 15 நிமிஷம் இருக்கும்.. இஷ்ட தேவதை எல்லாம் கஷ்ட தேவதையா மாறி இருக்க அப்டியே bed-ல விழுந்தேன்..ZZZzzz..

இவர ஒரு 3 days Hospital arrest பண்ணி வெச்சிருந்தாங்க.. நடுல உங்களுக்கு மலேரியா, டைபாயிட் போன்ற பல வியாதிகள் இருக்கலாம்ன்னு இருக்கற எல்லா test-உம் எடுத்திருக்காங்க.. ஆனா எதுவுமே இல்ல.. Finally ஒரு 5000 bill-ஆ தீட்டிட்டு discharge பண்ணிட்டாங்க!!

Epilogue:
இப்ப எல்லாம் தலைவர் வீட்ல ஒரு fruit juicer வாங்கி வெச்சுட்டு.. ஆரஞ்சு சூசு சாத்துக்கொடி சூசு-ன்னு ஒரே healthy items-தான்.. எத்தனை நாளைக்குன்னு தான் பார்ப்போமே!!!