Sunday, March 13, 2011

நண்பர்களின் திருமணத்தில்.. காமெடி, கலாட்டா, ஜொள்ளு!! (Scene 1)


இதுவரை நெறைய கல்யாணத்துக்கு போயிருப்போம்.. அங்க பல நல்ல, கெட்ட, கேடுகெட்ட அனுபவம் எல்லாம் நடந்திருக்கும்.. அதை எல்லாம் நானும் என் நண்பன் சந்தோஷ்-உம் லைட்டா அலாசி துவைக்க போறோம்..

கீறிப்புள்ள: மச்சான்.. நான் ரொம்ப கேவலப்பட்ட situation-டா அது..

சந்தோஷ்: அது எப்பவும் நடக்கறதுதானடா.. இதுல புதுசா என்ன இருக்கு.. ஹி ஹி ஹி..

கீறிப்புள்ள: ரைட்டு விடு.. ஒரு கல்யாண ரிசப்சன் போனா என்னடா பண்ணுவோம்..

சந்தோஷ்: லுக் விடுவோம்...

கீறிப்புள்ள: அப்றம்..

சந்தோஷ்: கிப்ட் குடுப்போம்...

கீறிப்புள்ள: அப்றம்..

சந்தோஷ்: நல்லா சாப்பிடுவோம்..

கீறிப்புள்ள: அப்றம்..

சந்தோஷ்: அப்புறம் கிளம்பிடுவோம்!!

கீறிப்புள்ள: இல்லடா.. இந்த லுக் விடறதுக்கும் கிப்ட் குடுக்கறதுக்கும் நடுல.. நடுல ஒன்னு பண்ணுவோமே?? அது, என்ன?? என்ன??

சந்தோஷ்: ஏன்டா இப்டி 'கல்கி'ல பிரகாஷ் ராஜ், 'கீதா-வ' டார்ச்சர் பண்ற மாதிரி நீ என்ன டார்ச்சர் பண்ற..

கீறிப்புள்ள: கொஞ்சம் யோசிடா.. ரெண்டுத்துக்கும் நடுல.. நடுல..

சந்தோஷ்: ஐயோ.. ஆண்டவா.. முடியலடா.. வேணாம்! விட்டுடு!! அழுதுருவேன்!!!

கீறிப்புள்ள: சரி விடு.. நானே சொல்றேன்..

சந்தோஷ்: இல்லைன்னா மட்டும் விடவா போற..

கீறிப்புள்ள: அதாண்டா.. மேடைக்கு போய் கை குடுத்து.. Many more happy returns of the day.. இது சாரி.. Happy married life.. எல்லாம் சொல்லுவோம்ல..

சந்தோஷ்: நீ மொதல்ல சொன்னது மட்டும் சொல்லிருந்த.. செத்தடியோய்!! ஹா ஹா ஹா..

கீறிப்புள்ள: சரி.. சரி.. அத ஃப்ரீயா விடு.. அன்னைக்கு நாங்க மேடைக்கு போனப்ப.. என்ன ஆச்சுன்னா.. (நான் அப்டியே மேல பாக்க..)

சந்தோஷ்: அது ஏன்டா ப்ளாஷ் பாக் சொல்லும் போது மேல பாத்து தான் சொல்லனும்ன்னு ஏதாவது லா இருக்கா, என்ன.. நார்மலா இருங்கலேன்டா..

கீறிப்புள்ள: சாரிடா.. கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்.. அன்னைக்கு எனக்கு முன்னால போன மூதேவி, கை குடுக்கறப்ப பொண்ணோட கைய நல்லா புடிச்சு நசுக்கிட்டான் போல..

சந்தோஷ்: ஏன்டா.. அப்டி சொல்ற..

கீறிப்புள்ள: அவனுக்கு அடுத்ததா பின்னாலையே முன்னாடி போன நான், ஈ-ன்னு வழிஞ்சுட்டே பணிவா குனிஞ்சு கைய குடுக்க, அந்த பொண்ணு கொஞ்சம் முறைச்சுட்டே வணக்கம் சொல்ல.. உலகமே அப்டியே ஸ்டாப் ஆயிட்டு..

சந்தோஷ்: ஹா ஹா ஹா.. வெயிட்.. வெயிட்.. உனக்கு தான் அநியாயத்துக்கு கூச்ச சுபாவமாச்சேடா.. யாராவது பொண்ணு தடுக்கி விழுந்தா கூட தாங்கி பிடிக்க கூச்சப்பட்டுட்டு தள்ளி நிப்பையே.. அன்னைக்கு கூட அந்த சுசிலா அதுக்குதானே உன்னை அடிச்சா.. ஹா ஹா ஹா..

கீறிப்புள்ள: இல்லடா.. அப்ப கூட சுசி கோவமா பாத்தாலே தவிர அடிக்கல..

சந்தோஷ்: அப்புறம் வேற எதுக்கு அடிச்சா..

கீறிப்புள்ள: சுசிலா கீழ விழுந்ததுல டிரஸ் எல்லாம் அழுக்கு ஆயிருந்துச்சா.. "ஐயோ!! ச்சுச்சுச்சூ.. Surf Excel இருக்கில்ல சுசி-ன்னு கேட்டேன்".. அதான் உட்டா ஒன்னு பொலேர்ன்னு..

சந்தோஷ்: ஹா ஹா ஹா.. அடப்பாவி.. உன்னால மட்டும் தான்டா இதெல்லாம் முடியும். சரி இந்த சீன்-க்கு திரும்ப வா.. ஏன் கை குடுத்த..

கீறிப்புள்ள: அதான் சொன்னேனேடா முன்னால போன மூதேவி குடுக்க.. நானும் ஒரு ஃப்லோ-ல குடுத்துட்டேன்..

சந்தோஷ்: ஹா ஹா ஹா.. சரி.. சரி.. அப்றம் என்ன ஆச்சுன்னு சொல்லு..

கீறிப்புள்ள: அப்றம் என்ன.. இந்த 'பாய்ஸ்' படத்துல 'எகிறிகுதித்தேன்' அப்டின்னு ஹீரோ ஹீரோயின் ஜம்ப் பண்ணி ஏர்-ல இருக்க கேமரா 360-டிகிரில கவர் பண்ணுமே.. அதேமாதிரி எங்கள சுத்தி எல்லா angle-லயும் கேமரா rotate ஆகற மாதிரி ஒரு பீலிங்..

சந்தோஷ்: டப்புன்னு.. நீயும் வணக்கம் சொல்லிட்டு அந்த பக்கம் போக வேண்டியதுதானேடா..

கீறிப்புள்ள: என்னடா நீ.. தெரியாத மாதிரி கேக்கற.. என்னோட ரியாக்சன் டைம் தான் பயங்கர fast ஆச்சே மச்சி..

சந்தோஷ்: அட ஆமால்ல.. படத்துல ஹீரோ ஸ்லோ மோசன்-ல திரும்புற மாதிரிதான உன்னோட நார்மல் ஆக்சனே இருக்கும்.. ஹா ஹா ஹா..

கீறிப்புள்ள: ஹும்ம்ம்ம்ம்ம்.. :(

சந்தோஷ்: விடு.. விடு.. அப்புறம் என்ன ஆச்சு..

கீறிப்புள்ள: அப்புறம் என்ன.. ரெண்டு பேரும் அதே போஸ்-ல அப்பிடியே சிலை மாதிரி நிக்க.. ஊரே தப்பட்லு கொட்டி நவ்விந்தி..

சந்தோஷ்: டேய்.. என்னடா.. டென்ஷன்-ல தெலுகு-ல மாட்லாடற(பேசற).. மொதல்ல அந்த ஆந்திரா அம்மாயி(பொண்ணு) பொம்மாயி கிட்ட கடலை போடறத நிறுத்து..

கீறிப்புள்ள: மவனே! நீ இப்ப நிறுத்தல நான் செகுனில விடப்போறேன் பாரு.. எவ்ளோ பீலிங்ஸோட சொல்லிட்டு இருக்கேன்.. அம்மாயி.. பொம்மாயின்னுட்டு..

சந்தோஷ்: .........

கீறிப்புள்ள: எங்க-வுட்டேன்..

சந்தோஷ்: செகுனில..

கீறிப்புள்ள: அதில்லடா.. ஆங்.. தப்பட்லு கொட்டினது-ல.. ச்சை.. ஊரே கை கொட்டி சிரிச்சது.. பயங்கர ஷேம் ஷேம்டா..

சந்தோஷ்: .......

கீறிப்புள்ள: என்னடா நான் இவ்ளோ சொல்றேன் நீ ஏதோ சீரியசா யோசிச்சிட்டு இருக்க..

சந்தோஷ்: இல்ல மச்சான்!! கை குடுத்தேன்னு சொன்னியே.. சோத்தாங் கை குடுத்தியா இல்ல பீச்சாங் கை குடுத்தியான்னு தான்.. ஹா ஹா ஹா..

கீறிப்புள்ள: ஆங்.. யானை தும்பிக்கைய குடுத்தாங்க.. போடா டேய்!!

சந்தோஷ்: சரி சரி..டென்ஷன் ஆகாத.. இதெல்லாம் நடந்தனால நீ கல்யாணத்துல சாப்பிடாம வெளி நடப்பு செஞ்சிட்டயா..

கீறிப்புள்ள: அதெப்டிடா..

சந்தோஷ்: அப்றம் வேற என்னதான்டா செஞ்ச..

கீறிப்புள்ள: அப்டி கேளு.. கேட்டா ஆடி போயிருவ.. எப்பவும் அஞ்சு இட்லி சாப்பிடறவன்டா நானு.. ஆனா அன்னைக்கு அவங்கள பழி வாங்கறதுக்கு பத்து இட்லி சாப்டோம்ல.. கார சட்னி சூப்பர்!!

சந்தோஷ்: மானங்கெட்டவன்டா நீ... காரமா ஏதும் பண்ணிருப்பன்னு பாத்தா கார சட்னி பத்தி பேசறியேடா.. சரி அந்த மேட்டர சொல்லிரு....

கீறிப்புள்ள: நெஜமாடா!! அவ்ளோ தாண்டா சாப்டேன்..

சந்தோஷ்: அதில்லடா.. இது வேற ஐட்டம்-டா..

கீறிப்புள்ள: சரி ஒத்துக்கறேன்.. அப்புறம் ரெண்டு கப் ஐஸ் கிரீம் சாப்டேன், ரெண்டு கப் பாதாம் பால் குடிச்சேன்.. போதுமா..

சந்தோஷ்: அத சொல்லல டா.. மக்கள் எல்லாரும் நீ சொல்ற மொக்கை மெசேஜ்-க்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. சீக்கிரமா சொல்லி முடிச்சன்னா அவங்க அடுத்த ப்ளாக்-க்கு போவாங்கல்ல..

கீறிப்புள்ள: இந்த மானங்கெட்ட மேட்டர்-ல என்னடா மெசேஜ் சொல்றதுக்கு இருக்கு.. இருந்தாலும் சொல்றேன்..

மக்களே!! இதனால உங்களுக்கெல்லாம் சொல்லவர்றது என்னன்னா.. மாப்பிள்ளையையும் பொண்ணையும் எவ்ளோ தான் தெரிஞ்சிருந்தாலும் கை குடுக்கறது, கட்டிப்புடிக்கறது இதெல்லாம் பண்றதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு 10 20 times நல்லா யோசிச்சிட்டு பண்ணுங்க.. (ஏன்னா "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்".. ஹி ஹி ஹி..) இல்லையென்றால் அப்போதும் இப்போதும் எப்போதும் நம் பாரம்பரியமான வணக்கத்தை சொல்லுவோம்.. என்று வணக்கம் கூறி உங்களிடம் இருந்து விடை பெறுவது கீறிப்புள்ள & சந்தோஷ். :))

Photo 1: Harry potter..எந்த பார்ட்-ன்னு தெரில.. தெரிஞ்சப்புறம் சொல்றேன்.. :))
Scene 2: எப்போ ரெடி ஆகும்ன்னு தெரில.. Scene 1, நல்லா இருக்கா இல்லையாங்கறத பொருத்து.. :))

Scene 2 போட்டாச்சு :))

9 comments:

Vasu said...

Super!!! Semma Mokka!!! hahaha.

Sakthiselvi said...

அன்னைக்கு அவங்கள பழி வாங்கறதுக்கு பத்து இட்லி சாப்டோம்ல.. கார சட்னி சூப்பர்!!

கீறிப்புள்ள நீ கிரேட் !!!!!

Sakthiselvi said...

அப்றம் என்ன.. இந்த 'பாய்ஸ்' படத்துல 'எகிறிகுதித்தேன்' அப்டின்னு ஹீரோ ஹீரோயின் ஜம்ப் பண்ணி ஏர்-ல இருக்க கேமரா 360-டிகிரில கவர் பண்ணுமே.. அதேமாதிரி எங்கள சுத்தி எல்லா angle-லயும் கேமரா rotate ஆகற மாதிரி ஒரு பீலிங்..

அச்சோ பாவம்

Sakthiselvi said...

ஏன்டா இப்டி 'கல்கி'ல பிரகாஷ் ராஜ், 'கீதா-வ' டார்ச்சர் பண்ற மாதிரி நீ என்ன டார்ச்சர் பண்ற..


அந்தளவு பாசக்கார பய புள்ளையா நீ!!!!

Sakthiselvi said...

இதுவரை நெறைய கல்யாணத்துக்கு போயிருப்போம்.. அங்க பல நல்ல, கெட்ட, கேடுகெட்ட அனுபவம் எல்லாம் நடந்திருக்கும்.. அதை எல்லாம் நானும் என் நண்பன் சந்தோஷ்-உம் லைட்டா அலாசி துவைக்க போறோம்..


துவைங்க துவைங்க நாங்க படிக்க ஆவலாக உள்ளோம்

Shanmug said...

Mama, sema comediyana sambavam athu,Live huh antha nigalchiya partha santhosatha vida ,padikkirathu nalla irukku.

Cheers
shan

கீறிப்புள்ள!! said...

@Vasu வாங்க Vasu!! முதல் வருகைக்கு, கருத்துக்கு நன்றி :)) ஆபீஸ்-ல எல்லாரும் சௌக்கியம்ன்னு நினைக்கறேன்.. ஹி ஹி ஹி..

@Sakthikka
/அந்தளவு பாசக்கார பய புள்ளையா நீ!!!!//
கண்டிப்பாக்கா!! கண்ணு மண்ணு தெரியாத அளவுக்கு பாசம்.. ஹி ஹி ஹி.. ;)

/கீறிப்புள்ள நீ கிரேட் !!!!!//
உங்களுக்கு தெரிது.. அவங்களுக்கு தெரிலையே.. :(( அந்த விஜய் டிவி-ல பேசற மாதிரி பெண்களுக்கு தெரிலையேன்னு சொல்ல வர்றேன்.. ஹா ஹா ஹா.. :)))

@Shanmug ரத்தக்கண்ணீர் வடித்த சம்பவம் அல்லவோ அது.. யார் கல்யாணத்துல நடந்ததுங்கறது மட்டும் நமக்குள்ளயே இருக்கட்டும்.. ஹி ஹி ஹி.. ;)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஏன்டா இப்டி 'கல்கி'ல பிரகாஷ் ராஜ், 'கீதா-வ' டார்ச்சர் பண்ற மாதிரி நீ என்ன டார்ச்சர் பண்ற..//
ஹா ஹா ஹா... சூப்பர்...:)

//Many more happy returns of the day.. //
தூக்கத்துல எழுப்பி கேட்டாலும் இதான் வரும் நமக்கு...well said...ஹா ஹா...:)

//"ஐயோ!! ச்சுச்சுச்சூ.. Surf Excel இருக்கில்ல சுசி-ன்னு கேட்டேன்".. அதான் உட்டா ஒன்னு பொலேர்ன்னு//
இது செம காமெடி...அடிச்சதோட விட்டாளே... சுசி யு ஆர் கிரேட்...:))

//தப்பட்லு கொட்டி நவ்விந்தி..//
நவ்வின்தோட போயிந்தே... லேகபோத்தே ச்சால டேமேஜ் அனமாட்ட...:))

//எப்பவும் அஞ்சு இட்லி சாப்பிடறவன்டா நானு.. //
ஐயோ இட்லியா...மீ எஸ்கேப்...:)

//ஆனா அன்னைக்கு அவங்கள பழி வாங்கறதுக்கு பத்து இட்லி சாப்டோம்ல//
இது...இதில்ல நம்ம கவரி மான் ஜாதி...ஹி ஹி ஹி...:)

//நம் பாரம்பரியமான வணக்கத்தை சொல்லுவோம்//
சரிங்க அண்ணே... வணக்கங்க அண்ணே... இதென்ன உங்க கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு முன்னாடியே மெசேஜ் குடுக்கற மாதிரி இருக்கே... அப்படியா?????....:)))
(பத்த வெச்சுட்டியே பரட்ட... - மைன்ட்வாய்ஸ்)

//Scene 2: எப்போ ரெடி ஆகும்ன்னு தெரில.. Scene 1, நல்லா இருக்கா இல்லையாங்கறத பொருத்து.. :))//
சீன் ஒண்ணு சூப்பர் அடிதடி... அடுத்த டமாக்கா எப்போ?....:))

கீறிப்புள்ள!! said...

@அப்பாவி அக்கா
/தூக்கத்துல எழுப்பி கேட்டாலும் இதான் வரும் நமக்கு//
அதே அதே!! என்னைக்கு இத யாருக்கும் சொல்லி உதை வாங்க போறமோன்னு பயம் எனக்கு!! :((

/சுசி யு ஆர் கிரேட்...:))//
சுசி.. எங்கிருந்தாலும் வாழ்க..வாழ்க.. கல்யாணம் ஆயிட்டா இந்த பாட்டு தானே பாடனும்.. :))

/லேகபோத்தே ச்சால டேமேஜ் அனமாட்ட...:))//
அவுனக்கா!! (வேற தெலுகு டயலாக் எதுவும் நியாபகம் இல்ல.. ஹி ஹி ஹி ;))

/ஐயோ இட்லியா...மீ எஸ்கேப்...:)//
நானும் ரொம்ப நாலா கேக்கணும்ன்னு இருக்கேன்.. அநியாயத்துக்கு அந்த சஸ்பென்ஸ் என்ன கொல்லுது.. அந்த போஸ்ட் லிங்க் கண்டிப்பா அனுப்புங்க.. :))

/இது...இதில்ல நம்ம கவரி மான் ஜாதி//
மீ கவரி மான் நோ.. கவரி மான் ஆப்போசிட் ஒன் மான்.. தட் மான் மீ..ஹி ஹி ஹி..

/இதென்ன உங்க கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு முன்னாடியே மெசேஜ் குடுக்கற மாதிரி இருக்கே.//
அடப்பாவி அக்கா.. நீங்க வேற எடுத்து குடுக்கறீங்களே.. நமக்கு வேண்டாத பயபுள்ளைக ரெண்டு மூணு இங்கனக்குள்ளதான் சுத்திட்டு இருக்காய்ங்க.. இதான் சான்ஸ்-ன்னு கடுப்பேத்த கண்டீசனா செய்வானுங்க.. அவ்வ்வ்வவ்வ்வ்வ்.. :(((

/அடுத்த டமாக்கா எப்போ?....:))//
சனிக்கிழமை ரிலீஸ் பண்ணிருவோம்.. விதி வலியது.. ஹா ஹா ஹா.. :))

Post a Comment

இத்தனை நேரம் என் கீறலை பொருத்தமைக்கு நன்றிகள் கோடி.. இது நீங்கள் கீறுவதற்கான இடம்.. கொஞ்சம் கீறிட்டு போங்க பாஸு.. :))