Wednesday, July 28, 2010

வருது!! வருது!! விலகு விலகு!!

இது ஒரு unfortunate வியாழக்கிழமை நைட் எங்க ரூம்-ல நடந்த சம்பவம்.. வயிறு சரில்லன்ன எல்லாரும் என்னங்க பண்ணுவாங்க.. வர டீ-ல எலுமிச்சம்-பழம் பிழிஞ்சு அதுக்கு side dish-ஆ biscuit சாப்பிடலாம்.. உ.பா.-உம் (உற்ச்சாக பானம்) side dish-ஆ Andhra chicken வாங்கி சாப்பிடலாமா.. என்னோட ரூம் மேட்-தாங்க இத செஞ்ச அந்த அதி புத்திசாலி.. கூடவே இருக்கியே ‘செவ்வாழ’ நீயாவது சொல்லக்கூடதான்னு நீங்க கேக்கறது புரியுது.. ஆனா சொன்னா எங்கங்க கேக்கறாரு.. இதெல்லாம் fully purified ஒரு சின்ன தூசு கூட உள்ள போகாது.. வயித்துல இருக்கற பூச்சி எல்லாத்தையும் கூட kill பண்ணிடும்ன்னு bit bit-ஆ போடறாரு..

சரி சம்பவம் நடந்த அன்னைக்கு என்ன ஆச்சுன்னா.. இந்த உ.பா. and சிக்கன் பாதி உள்ள போறப்பவே reactions start ‘ஆயி’ருச்சு.. டாய்லெட்-க்கும் Hall-க்குமா மொதல்ல ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்சவரு.. கொஞ்ச நேரத்துல நாலு கால்ல 'கவுண்டமணி' மாதிரி, 'அம்மா! முடிலயே'-ன்னு திரும்பி வராரு.. இதுல dinner-க்கு full meals parcel வேற கட்டிட்டு வந்திருக்காரு.. (தொடாமலே அது குப்பை தொட்டிக்கு போயிருச்சு)

Finally, ஒரு வழியா ஊர் அடங்கறப்ப அவரு வயிறும் கொஞ்சம் அடங்க.. He went off to sleep.. And my usual second show movie got over around 12 30 AM that night.. சரி தூங்கலாம்ன்னு எல்லாம் set up பண்ணிட்டு.. இஷ்ட தேவதைகள் எல்லாரும் கனவுல ‘நல்லா இடுப்ப வளச்சு நெளிச்சு ஆடணும்ன்னு’ மனமார வேண்டி கேட்டுக்கிட்டு கண் அசந்தேன்.. :- zzzzzzzzz

ஒரு 1 30-க்கு.. “மெல்ல மெல்ல என்னை தொட்டு!!!.. ”சில்க் மேடம் ரெம்ப நாள் கழிச்சு கனவுல re-entry தராங்கலோன்னு நெனச்சா.. Hmmmkkkuuum.. My bloody mobile was ringing.. இந்த நேரத்துல யாருடான்னு  பாத்தா.. Room mate Calling (பக்கத்து ரூம்-ல இருந்துட்டு)... என்னடா இது நம்மல வெச்சு எதுவும் காமெடி பன்றாரான்னு யோசிச்சுட்டே எழுந்து போனேன்.. “Full-ah de-hydrate ஆயிட்டேங்க.. எழுந்திருக்க கூட முடியல.. கொஞ்சம் தண்ணி எடுத்து குடுங்க”-ன்னாரு.. சரின்னு ஒரு Full bottle (‘Water bottle’-ல தாங்க) தண்ணிய பிடிச்சு குடுத்துட்டு.. எல்லாம்  ஒ.கே.-வான்னு confirm பண்ணிட்டு திரும்ப வந்து dreaming-அ continue பண்ணேன்.. :-zzzzzzzzz

இன்னொரு ஒரு மணி நேரம் போயிருக்கும்ன்னு நெனைக்கறேன்.. தொப் தொப் தொப்-ன்னு வேக வேகமா காலடி சத்தம்.. வேகமா கதவு தொறக்கற மாதிரி சத்தம்.. எழுந்து பாத்தேன்.. அவரேதான் ஒரு மாதிரியா அரை மயக்குத்துல இருந்தாரு.. He was breathing heavily and talking in-coherently like.. “முடிலங்க....”(GAP) “Acute pain..”(GAP) “Ambulance...”(GAP) “Admit பண்ணிருங்க..” என்னடா இது.. Ambulance.. Admit-ன்னு.. பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றாரே.. நெஜமாவே பிரச்சனையா இல்ல ஏதும் பயத்துல பொலம்பராரான்னு வேற ஒரு சந்தேகம்..

சரி அவரு ஆசைய ஏன் கெடுப்பானேன்னு.. Costume change பண்ணிட்டு (இது ரெம்ப தேவையான்னு நீங்க கேக்கலாம்.. Actually it was a very very Cold nite.. So needed some warm clothes.. அப்டின்னு சொன்னா நம்பவா போறீங்க.. நம்பினவங்க நேரா அடுத்த para -க்கு போலாம்.. இது நம்பாத smart ஜீவன்களுக்காக.. ‘ஏதும் நல்ல lady doctor இல்லன்னா Nurse இருந்தா :-D அப்புறமா feel பண்ண கூடாதில்ல.. எப்புடி!!’)

Bike key தேடி எடுக்கும்போது.. Light-ஆ 'உவ்வே' அப்டின்னு ஒரு சத்தம்.. OMG!! இப்போ vomit-ஆ.. என்ன கொடுமடா இது!! ஒரு கிழிஞ்ச பழைய துணியோட நான் தரைய clean பண்ற மாதிரி image disco light-ல flash ஆக.. Wash basin போங்க.. Wash basin போங்க-ன்னு நான் கதற.. மிச்சம் இருந்த மொத்தமும் wash basin-ல.. கொலம் கட்டி நிக்குது.. இந்த கலவரத்துல தூங்கிட்டு இருந்த இன்னொரு ரூம் மேட்-அ எழுப்பி விட்டுட்டு..

I took my bike and went to see if any hospital is open at this un-dogly hour(Even street dogs had gone to sleep at that time).. As I was nearing the nearest hospital... I could see some faint light.. But no one around.. So stopped, got down, went there and shouted “Essuss meeeeee... Is anyone thrrrrr?????” and shook the locked grill.. And finally a ‘Ward boy’ came with blurry eyes.. Asked if its open.. And thankfully he said yes..

அப்பாடான்னு திரும்ப வந்து பாத்தா இவர காணோம்.. எங்கடா அவருன்னு இன்னொரு ரூம் மேட்-அ கேட்டா.. Bath room-அ கை காமிச்சான் அவன்.. அட அது சரி.. இதத்தான் ‘முன்னால பால் ஆறாவும் பின்னால தேன் ஆறாவும் ஓடுதுன்னு சொல்லுவாங்களோன்னு’ mind voice-ல dialogues.. So like that waited for him to finish yet another download session that night and come out..

இதுலயே Hospital scene continue பண்ணா post இன்னும் ரொம்ப long ஆயிரும்ன்றதால இந்த scene-ல cut பண்ணிப்போம்!!

4 comments:

Kabilan said...

hahahahaha.....good one machi...
aana..doctor nurse correct pann dress panniyea...highlight da..

"Munnala paal aaraavum pinnaala then aaravum odudhu" - like it

saranya said...

sethu ponna silk kannavula varathu rombaaaa mukiyam... :P ithana prechanai la costume change vera.... ada kadavulae....

கீறிப்புள்ள!! said...

@Kabi Eppa edhu nadakkumnnu theriyadhu illaya.. Ellathukkum ready-ah iruppome :-D

@Saran :D :D

saranya said...

sethu ponna silk kannavula varathu rombaaaa mukiyam... :P ithana prechanai la costume change vera.... ada kadavulae....

Post a Comment

இத்தனை நேரம் என் கீறலை பொருத்தமைக்கு நன்றிகள் கோடி.. இது நீங்கள் கீறுவதற்கான இடம்.. கொஞ்சம் கீறிட்டு போங்க பாஸு.. :))