Friday, July 23, 2010

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்!!!

டைட்டில் suggest பண்ற மாதிரி இது romantic post இல்லீங்கோ.. 'கொஞ்சம் நெறையவே' கீற போறேன்!!! இது நான் பஸ்-ல ஆபீஸ் போயிட்டு இருந்த Times of India-ங்க.. பெங்களூர் பஸ் எல்லாம் எப்டி இருக்கும்னா முன்னாடி single door entry.. சென்டர்-ல double door entry separated by a bar.. இந்த post-ல வர்ற பஸ் ஸ்டாப் எங்க ஆபீஸ் வாசல்லையே தான் இருக்கு.. 99% அங்க வெய்டீஸ் பண்றவங்க எங்க கம்பேனி எம்ப்லாயீஸ் தான்.. அந்த stop-ல 7 to 9 full peak time.. எத்தன பஸ் வந்தாலும் Gold fish வயிறு வீங்குன மாதிரி மக்கள் கூட்டம் நெறஞ்சுட்டே தான் இருக்கும்.. அதனால நம்ம பிக்-பாக்கெட் சகோதர சகோதரிகளுக்கு ரெம்ப குஷியா இருக்கும்.. Easy targets தான.. So I'll wait till something is lil free..

ஆபீஸ் stop-ல இருந்து 200 மீட்டர் தூரத்துல ஒரு turning இருக்கும்.. பஸ் அங்க திரும்பும்போது.. அதுவரைக்கும் தனி தனி group-ஆ கடலை மொக்கைன்னு போட்டுட்டு இருந்தது எல்லாம் 'சாமி தேர் வந்தா மக்கள் கூட்டம் ஒண்ணா சேருமே' அந்த மாதிரி இங்க கூட்டம் ஒண்ணா சேந்துரும்.. அப்டியே bus-ஆ நோக்கி 'சொறி'-படை எல்லாம் எடுப்பாங்க பாருங்க.. Driver பாவங்க.. யார் மேலயாவது ஏத்திருவமோன்னு ஒரு பயத்துல அங்கயே நிறுத்திருவாரு.. உடனே இங்க இருந்து running race தான்..

நம்ம கூட்டம் அப்டியே போயி இருக்கற முன்-வழி பின்-வழி எல்லாம் அடைச்சிக்கும்.. நம்ம 'வடிவேல்' conductor-ஆ வர்ற ஒரு படத்துல ரெண்டு பக்கமும் கூட்டம் அடைச்சிட்டு.. யாருமே ஏறாம அங்க இங்கன்னு தள்ளிட்டே இருப்பாங்களே..Same situation-ங்க..

அட இத Bus-அ விட்டு இறங்கரவங்களுக்கு வழி விட்டுட்டு பண்ணா பரவால்ல.. அவங்களையும் இறங்க விட மாட்டாங்க.. முட்டி மோதி அவங்கள திரும்ப உள்ள தள்ளி விட்ருவாங்க.... பாமர மக்கள் கூட பாத்து காரி துப்பிட்டு போவாங்க.. இது எல்லாம் educated IT கூட்டமா இல்ல எச்சிகல்லை கூட்டமான்னு பாக்கற எல்லாரும் doubt ஆவாங்க..
இப்டி அடி தடி எதுக்குன்னு பாத்தா.. முன்னால போன முக்காவாசி மூதேவிக்கும் 'ஆள்' இருக்கும்.. (Light-அ கருகர ஸ்மெல் எங்கயோ வருதோ!!! :D)

அவனுகளோட 'அவங்க' "Oh! I hate this crowd yaah!!" அப்டின்னு ஒய்யாரமா ஒரு ஓரமா நிப்பாங்க.. இவனுக seat பிடிச்சுட்டு ஜன்னல் வழியா.. "Heeee!!! I got a seat for u daaa-ன்னு வழிய.." பஸ் எல்லாம் ஒரே ஜொள்ளு.. இது centre door-ல நடக்கற கூத்து..

நம்ம ladies-உம் நாங்க என்ன சலச்சவங்கலான்னு front steps-ல முட்டிட்டு ஏறுவாங்க.. இந்த முன்னால ஏறுதே ஒரு கூட்டம் அது பெரும்பாலும் 'தூள்' படத்துல வர்ற பாட்டி மாதிரி ஆட்டோல ஏறும்போது கூட ஜன்னல் Seat எனக்குன்னு சண்டை போடறவங்க.. ஆள் ஆளுக்கு ஒரு seat-ல ஜன்னல் seat எடுத்துப்பாங்க.. அதனால ரெண்டு பேராவோ இல்ல கும்பலாவோ வந்த கூட்டம் எல்லாம் பின்னால வந்து seat occupy பண்ணிட்டு 'ஏய் இங்க வாடி..ஏய் நீ அங்க போடின்னு' ஒரே களேபரம் தான் போங்க.. Settle-ஆக ஒரு பத்து நிமிஷமாச்சும் ஆகும்.. நாம அந்த single occupied ladies seat-ல போய் உக்காரலாமா வேணாமான்னு mind-ல ஒரு பட்டி மன்றம் நடத்தி சரி யாரும் வந்தா எழுந்துக்கலாம்ன்னு உக்காந்தா..

நம்ம நேரம் அடுத்த stop-லயே condition-ஆ ஒரு lady ஏறுவாங்க... நேரம்டான்னு நாம எழுந்து seat குடுத்தாலும்.... அம்மன் படத்துல வர்ற Ramya krishnan, Meena range-க்கு குடுப்பாங்க பாருங்க ஒரு fire look-u.. Me two steps back..

இந்த Govt மொதல்ல ladies seat-ன்னு தனியா இருக்கறத cut பண்ணனும்.. இல்லன்னா அதே மாதிரி Gents seat-ன்னு தனியா இட ஒதுக்கீடு செய்யணும்.. என்னங்க ஓர வஞ்சனை இது :-(( (இது ஒரு பெண் ஆதிக்க சண்முகம்.. இது சமூகம் :-(()

அன்னைக்கு இதெல்லாம் யோசிச்சு ஒரு 4-லு 5-ஞ்சு பஸ் விட்டுட்டேன்.. கால் கடுக்க ஒரு முப்பது நாப்பது நிமிஷம் நின்னுட்டு இருந்திருப்பேன்.. அதுக்கு மேல முடியல.. நான் decide ஆயிட்டேன்.. ஒ.கே. அடுத்த பஸ்-ல வீட்டுக்கு போயே தீரனும்ன்னு.. நல்லவேளையா சில முட்டி மோதல்களுக்கு அப்றமா கொஞ்சம் Gap கெடைக்க ஏறிட்டேன்.. பழைய மாதிரியே சில 'Romeo-க்கள்' seat பிடிச்சு வெச்சிருக்க.. ஒரு seat-ல மட்டும் எனக்கும் பக்கத்துல இருக்கற bag-க்கும் சம்பந்தம் இல்லைங்கற மாதிரி ஒருத்தன் இருந்தான்..
அவன் கிட்ட கேட்டேன் "Ne of ur (Girl)friends coming??"
அவன் "Nope...!!"

எனக்கே நாலு எலை விட்டு அஞ்சாவது எலைல தான் தம்மாதுண்டு கிடச்சதுங்கற மாதிரி.. Bag -அ எடுத்துட்டு அங்க உக்காந்துட்டேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு ஒருத்தன் வந்தான்.. Bag என்கிட்டே இருக்க அப்படியே ஏதோ கொலை செஞ்ச மாதிரி பாத்தான்.. Already I was in super kaduppu after the long wait..
வாடா! வாடா!! வாடா!!!

He: "Hello!"(என்ன phone-லயாடா பேசற..) "I had kept my bag here." (ஜன்னல் வழியா!!)
Me: Still sitting.."So what??!!" இன்னைக்கு ஒரு fight இருக்குன்னு எல்லாரும் நெனைக்கலாம்..
நான் அப்ப head full shaved..French beard.. அப்புறம் காதுல கடுக்கன் எல்லாம் போட்டுட்டு கொஞ்சம் கொடூரமா-தான் இருந்தேன்..
அதனாலயோ என்னவோ அவன் bag-அ வாங்கிட்டு பேசாம அந்த பக்கமா போய்ட்டான்.. எவன்டா கண்டு புடிச்சான் இந்த ஜன்னல் வழியா கர்ச்சீப் போடறதையும், துண்டு போடறதையும்.. மவனே!! அவன் மட்டும் கைல கெடச்சான்!!!

Now tat I hav become a 'Bullet-eer'!!
"எப்டி-தான் இந்த Bus-ல எல்லாம் போறாங்களோ!! ஐயோ!! ஐயோ!!" :PP

11 comments:

Thee said...

Sirichu Sirichu yenakku kannula thanniye vandhiduchu!!! Idhukku mela mudiyala!!! Super !!!

Karthick said...

Yenda ippadi oru mokka!!!!!!!!!!!!!!!

saranya said...

omg!!!!!! im not able to stop laughing.... too good.......

Kabilan said...

nalla comedy machi...'Yey Inga vaadi..Yey nee anga podi' - like it

கீறிப்புள்ள!! said...

@Deepa: Thanks :-) Now u wud know y I was desp to get de bike :-))
@Karthick: Nee yendha Karthick-nnu therla.. But if u try the bus stop once u'll know..
@Saranya: Thanks :-)
@Kabilan: Thanks machi :-)

Pavithra Ramasamy said...

too good ...ROFL ...

கீறிப்புள்ள!! said...

Receiving nice comments after long time.. That too on my Bday.. Thanks Pavithra.. :D

Pavithra Ramasamy said...

too good ...ROFL ...

saranya said...

omg!!!!!! im not able to stop laughing.... too good.......

Karthick said...

Yenda ippadi oru mokka!!!!!!!!!!!!!!!

Deepa said...

Sirichu Sirichu yenakku kannula thanniye vandhiduchu!!! Idhukku mela mudiyala!!! Super !!!

Post a Comment

இத்தனை நேரம் என் கீறலை பொருத்தமைக்கு நன்றிகள் கோடி.. இது நீங்கள் கீறுவதற்கான இடம்.. கொஞ்சம் கீறிட்டு போங்க பாஸு.. :))