Wednesday, July 21, 2010

உன்னால் முடியும் தம்பி தம்பி!!!

Gym-க்கு போன மொத நாளுங்க.. Warm up எல்லாம் முடிச்சுட்டு trainer-ட்ட போனேன்... Trainer: இன்னைக்கு push ups n pull ups பண்ணுங்க நாளைக்கு variations தரேன்.. Oh Push ups..Pull ups மட்டுமா.. எல்லாம் சிம்பிளா இருக்கும் போலன்னு நானும் நம்பி போயிட்டேங்க..

o Push ups - இத நீங்க நிறைய தமிழ் படத்துல பாத்திருபிங்க.. Hero குப்புற படுதாப்ல இருந்துட்டு அப்டியே ரெண்டு கையும் கீழ அழுத்தி மேல வந்துட்டு கீழ போவாரு.. சில சமயம் அவரோட கொழந்த முதுகுல இருக்கும்..பல சமயம் Heroin இருப்பாங்க.. ஒரு ரெண்டு மூணு முக்கி மொனகி பண்ணிடேங்க.. நாலாவது பண்ணும் போது நாக்கு தள்ளிருச்சு..

o Pull ups.. இது என்னன்னாக்க ஒரு நீளமான Bar (கம்பிய சொன்னேங்க) தலைக்கு மேல இருக்குங்க.. அத ரெண்டு கைளையும் பிடிச்சுட்டு.. ரெண்டு காலையும் atta time-la தூக்கிட்டு அப்படியே மேல வந்து.. அந்த Bar-க்கு மேல போயிட்டு கீழ வரணும்.. அப்புறம் திரும்ப மேல போனும் கீழ வரணும்.. சரியா!! நல்லா deep breaths எடுத்துட்டு strong-ஆ பிடிச்சேன் அந்த bar-ர..First try Hhhhmmmm.. (Mind-ல dialogues: எழுந்திரு.. Hhhhmmmm.. முடியல.. வயித்துக்குள்ள மதியம் சாப்ட்ட மூணு chicken piece இன்னும் அப்பிடியே இருக்கு.. MAYA.. Hhhhhmmm.. முடியல..) அப்டியே slow-ஆ style-ஆ Bar-ர விட்டுட்டு நம்மள யாரும் பாத்துட்டாங்கலோன்னு ஒரு நோட்டம் விட்டேன்.. யாரும் பாக்கல.. அப்பாடா.. அங்க இருந்து scapuuu..

அடுத்த நாள்:
Gymm-க்கு போகனுமா வேணாமான்னு பல முறை யோசிச்சேங்க..எத்தனையோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமான்னு டயலாக்-க மனசுல வெச்சுட்டு கெளம்பிட்டேன்..

Today shoulder exercises.. மொதல்ல Dumbell raises பண்ணனும்.. இது ஒன்னும் இல்லிங்க dumbells-ah ரெண்டு கைல வெச்சுட்டு தெருவுக்கு வழி காட்ற மாதிரி தோள்பட்டைவரைக்கும் கைய மேல தூக்கி ஏறக்கனும்..

எடுத்தவுடனே நாங்க தான் சிங்கம்-லன்னு 5kg dumbells எடுத்தேன்.. Hhhmmmm.. மறுபடியுமா.. ஆண்டவா.. முடியல.. ok 4kgs.. வெறும் காத்து தான் வருது.. கை மேல வரவே இல்ல..ஓ.கே.(ஆள்மாறாட்டம் தான் முக்கியம்..Amt இல்லன்னு கரகரத்த சேட்டு வாய்ஸ்-ல மணிவண்ணன் சொல்ல) 2.5 kgs-க்கு வந்தேங்க.. பக்கத்துல 'எரும' மாடு கணக்கா இருந்தவன் எல்லாம் 'heHey'..Hey U-ன்னு கேவலமா பார்க்க..ஒரே பப்பி ஷேமா போயிருச்சு..

2.5 kgs-ல First try..அப்பாடா ஓ.கே. ஒரு 10 repetitions பண்ணிருப்பேன்.. அப்றமா அடுத்ததுக்கு கைய நேரா தூக்குனா அது ஏதோ Railway gate மாதிரி..ஒரு Angle-ல வெளிய போகுது.. நான் அப்டியே சாக்-ஆயிட்டேன்.. அத அப்படியே கீழ வெச்சுட்டு.. மெல்ல நகந்து அடுத்த item வந்தாச்சு....

Plate raises வந்தேன்.. இது நமக்கு டிபன் போடற எவர்-சில்வர் தட்டு தூக்கறமாதிரி இல்லிங்க.. ஒரு 71/2 கிலோ-ல சும்மா கின்னுன்னு weight-ஆ இருக்கும்.. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனேன்னு கஷ்டப்பட்டு அத ஒரு வழியா முடிச்சாச்சு.. இதுக்கு மேல தாங்காதுடா சாமின்னு கெளம்பிட்டேன்..

அடுத்த நாள் இப்டி அப்டி நகர முடியல.. இது நரக வேதனையா இல்ல நகர்ற வேதனையா.. ஆண்டவா... ஒரு ONE week Gymm-க்கு leave விட்டுட்டேன்.. ஹி ஹி ஹி :-)))

11 comments:

Kabilan said...

Machi...nee gym'ku dan leave vitta...naan rendu naal office kuda pogala da.. :((

Anonymous said...

Ithelam arasiyalla sakajam... Ithukelam poi gymku leave poduvaangala?? Unaku gymnu pogarathuku somberi thanam athuku ipdi oru reason...athuvum 1 week-ku athae reason... enna polapu kadavulae ;-)

- Kitty :)

Anonymous said...

Btw, very funny to read :) - Kitty

கீறிப்புள்ள!! said...

@Kabi LOL :-)
@Kitty Nejama ve.. Promise-ah Colgate-ah sema vali.. :-( Kai thhooka kooda mudiala appa.. Ippa ellam leave rendu naala kammi panniten :-)

sakthi said...

first appadi than erukkum praveen konja naalil sari aayidum

saranya said...

ithu ella ippo mukiyam illa.... r u still going to the gym or not???? athu thaan mukiyam... :)

கீறிப்புள்ள!! said...

@sakthi: Yeah.. Now I know it :-))
@Saran: I will continue definitely :-D

Pravy said...

@sakthi: Yeah.. Now I know it :-))
@Saran: I will continue definitely :-D

Praveen Kumar said...

@Kabi LOL :-)
@Kitty Nejama ve.. Promise-ah Colgate-ah sema vali.. :-( Kai thhooka kooda mudiala appa.. Ippa ellam leave rendu naala kammi panniten :-)

Praveen Kumar said...

@Kabi LOL :-)
@Kitty Nejama ve.. Promise-ah Colgate-ah sema vali.. :-( Kai thhooka kooda mudiala appa.. Ippa ellam leave rendu naala kammi panniten :-)

Kabilan said...

Machi...nee gym'ku dan leave vitta...naan rendu naal office kuda pogala da.. :((

Post a Comment

இத்தனை நேரம் என் கீறலை பொருத்தமைக்கு நன்றிகள் கோடி.. இது நீங்கள் கீறுவதற்கான இடம்.. கொஞ்சம் கீறிட்டு போங்க பாஸு.. :))