Showing posts with label Abroad. Show all posts
Showing posts with label Abroad. Show all posts

Tuesday, March 8, 2011

வெளிநாடு செல்லும் நம்மவர்கள்.. பப்ளிக்-ல உம்மாவா?? 2nd part!!

முதல் ஆறு மொக்கையை படிக்க இங்கே கிளிக்கவும்!!

7. மன்னன் படத்துல ரஜினி-யும், கவுண்டரும் சின்ன தம்பி படத்துக்கு கத்தி, ஆசிட் எல்லாம் காட்டி டிக்கெட் வாங்குறது ஒரு காமெடி-க்காக.. அதையே வேதமா எடுத்துட்டு அந்த நாட்ல க்கீயு ஜம்ப் பண்ணக்கூடாது.. அங்கல்லாம் க்கீயு ஜம்ப் பண்றது ரொம்ப ரொம்ப அநாகரீகமா கருதப்படும்.. நீங்க சில சமயம் தர்ம அடி வாங்க வேண்டி வந்தாலும் வரலாம்.. இதுவரை வாங்கலைன்னா பூர்வ ஜென்ம புண்ணியம்ன்னு நெனச்சுக்கோங்க.. For Ex: சூப்பர் மார்க்கெட்-ல நீளமான க்கீயு இருக்கறப்ப நீங்க ஒன்னு ரெண்டு பொருள் மட்டும் வாங்கற மாதிரி இருந்தா, (அதுக்குன்னு தனி க்கீயு இல்லாதபட்சத்தில்) முன்ன இருக்கறவங்க கிட்ட ஒரு "ப்ளீஸ்.." போட்டு கேட்டீங்கன்னா அவங்களே விட்டுக்கொடுத்திருவாங்க..


8. அந்த நாட்டு மக்களின் உடைகள் பேஷன் என்ற பேரிலோ கஞ்சத்தனத்தினாலோ கம்மியா இருக்க வாய்ப்பு இருக்கு.. அதுக்காக நம்ம ஊர்ல போஸ்டரையே திங்கற மாதிரி பார்க்கறது போல, அங்க போய் கலியுக துச்சாதனனா கண்ணாலேயே துகிளுரிக்கக் கூடாது.. "Staring is bad manners" உங்க வீட்ல சொல்லிதரலயான்னு பேச்சு வாங்க வேண்டி வரும்..
இதுக்காகவே ஸ்விம்மிங் பூல் போறவங்களும் ஜாக்கிரதை.. ஒரு சில நாட்ல, மொறைச்சு பாத்ததுக்கு போலீஸ்-ல கூட கம்ப்ளைன்ட் பண்ணலாம்.. கெடச்ச சந்துல ரோட்ட கிராஸ் பண்ணாலே பைன் போடறவங்க.. நீங்க வேற லைன் ஏதும் கிராஸ் பண்ணா என்ன ஆகும்ன்னு யோசிங்க.. நல்லா யோசிங்க!! சொல்றது நம்ம கடமை.. அப்புறம் உங்க இஷ்டம்..

9. நம்ம ஊர்ல ரெண்டாயிரம் ரூபாய்க்கு சாப்டாலும் ரெண்டு ரூபா தான் டிப்ஸ் வெச்சுட்டு போவாங்க.. சர்வர் மனசுக்குள்ள எல்லா பேட் வோர்ட்ஸ்-லயும் திட்டிட்டு போவான்.. அதனால நீங்க இருக்கற நாட்ல பில் அமௌன்ட்-ல எவ்ளோ சதவிதம் டிப்ஸ் வெக்கனுங்கரத தெரிஞ்சுக்கோங்க.. இல்லன்னா கூட வந்தவங்க கஞ்ச பயன்னு நெனைக்க வாய்ப்பிருக்கு..

10. சத்தமா பேசறது நம்ம மக்களுக்கு சாதாரணம்.. அது நம்ம ஊர்ல இருக்கறப்ப சில சமயம் கடுப்பா இருந்தாலும் யாரும் கண்டுக்கறதில்லை.. ஆனா வெளிநாட்ல அத ரொம்பவே தப்பா எடுத்துக்க வாய்ப்பிருக்கு.. அந்த நாட்டு மக்கள் பொது எடத்துல போன் பேசறதும் தெரியாது வெக்கறதும் தெரியாது.. ஆனா நம்ம ஆளுங்களுக்கு போன் தேவையே இல்ல, இங்க பேசற சத்தம் அங்கன நேராவே கேட்ரும் மத்தவங்களுக்கு காது ஜவ்வு அந்து போகும்..

11. கண்ட எடத்துல குப்பை போடறது, அப்புறம் நம்பர் ஒன் போறது எல்லாம் ரொம்ப ரொம்ப தப்பு.. மாட்டினா பைன்-ஓட சேத்தி பப்ளிக் டாய்லெட் கூட கிளீன் பண்ண வேண்டி வரும்..
அப்புறம் அங்க எல்லா எடத்துலயும் வெஸ்டேர்ன் ஸ்டைல் தான்.. எனக்கு இந்தியன் ஸ்டைல்ல போனாதான் வரும்ன்னு ஏறி உக்காந்து ஒடச்சுராதீங்க.. பொழப்பு நாறிடும்.. ஹி ஹி ஹி.. உடனே அனுபவம் பேசுதுன்னு எல்லாம் நக்கல் பண்ணக்கூடாது.. எல்லாம் காத்தோட வர்ற சேதி தான்.. ஹி ஹி ஹி..


12. வீட்ல வளக்கற நாய், பூனை இதெல்லாம் அவங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி.. அதனால இங்க நாய கண்டா கல்ல-வுட்டு அடிக்கற மாதிரி அங்க ஏதும் ஏடாகூடமா பண்ணீங்க அவ்ளோதான்.. மேட்டர் ஓவர் மோனே தினேஷா!!

இதில் பெரும்பாலானவை நம் நாட்டில் மிகவும் சாதாரணம் தான்.. அத இங்க செஞ்சா "எப்டி போறான் பாரு பரதேசி"-ன்னு திட்டுவாங்க.. ஆனா இதையே நீங்க அங்க செஞ்சா "எப்டி போறான் பாரு ஒரு 'இந்திய' பரதேசி"-ன்னு நம்ம நாட்டையும் சேத்தி திட்டுவாங்க.. நம்ம நாட்ட அவங்க நல்ல விதமாவோ இல்ல கெட்ட விதமாவோ பாக்கறது, நீங்க பண்ற ஒவ்வொரு சின்ன விசயத்துல தான் இருக்கு..

டிஸ்கி 1- அட இப்படி எல்லாம் இருக்கான்னு சிலர் உணர்ந்தா அதுவே போதும்..

டிஸ்கி 2- யார் என்ன சொன்னாலும் நாங்க இப்டியே தான் இருப்போம் சங்கம்.. ஒன்னும் சொல்றதுக்கில்லைங்கன்னா!!

டிஸ்கி 3- எல்லா போட்டோ-வும் கூகிள்-ல சுட்டது.. ஹி ஹி ஹி..

வெளிநாடு செல்லும் நம்மவர்கள் செய்யும் தவறுகள்!! பப்ளிக்-ல உம்மாவா?? ;)

இந்தியா மானத்தை காப்பாத்த யாரையும் தலைகீழா சம்மர் அடிக்க சொல்லலீங்க.. கொஞ்சம் பருப்போட.. ச்ச.. பொருப்போட நடந்துகிட்டா போதும்..எல்லாரும் பெரும்பாலும் சம்பாதிக்க தாங்க போறது.. ஆனா அதுக்காக பிறந்து வளர்ந்த தாய் நாட்டு மானத்தை வாங்கனுமா?? இதெல்லாம் தப்புன்னு தெரியாமையும்,அதனோட முழு விளைவுகள் புரியாமையும் பல பேர் இத பண்ணிட்டு இருக்காங்க..

1. எல்லா கம்பெனி-லயும் வெளிநாட்ல நாம செஞ்ச செலவுக்கு பில் குடுத்தா அத திரும்ப குடுத்திருவாங்க.. இந்த பொய் கணக்குபுள்ளைங்க பண்ற மானங்கெட்ட வேலை இருக்கே..  நான் முதல் முதலில் இதனால வாங்கின செருப்படி.. அது அந்த நாட்டில் இருக்கும் ஒரு பிரபலமான இந்திய ஹோட்டல்.. ஒரு ஆபீஸ் பார்ட்டி-க்காக அந்த நாட்டு பசங்க சிலரும் நம்ம ஊரு கிங்கரர்களும் போயிருக்காங்க.. பில் நம்ம நாட்டு பணத்துல ஒரு நாற்பதாயிரம் வந்திருக்கும்.. ஆனா பில்லுக்கு பணம் குடுத்தது அந்த ஊர் பசங்க.. சரின்னு எல்லாரும் கெளம்பியாச்சு.. கொஞ்ச நேரத்துல கிங்கரர்கள் திரும்ப வந்து பில் காப்பி ஒன்னு கெடைக்குமான்னு கேட்டு வாங்கிட்டு போயிருக்காணுக.. என்ன ஈனப் பொழப்பு இதெல்லாம்!!

நான் அந்த ஹோட்டல்-க்கு சாப்பிட போனப்ப அந்த முதலாளி இந்தக் கதைய சொல்லிட்டு.. உங்களுக்கு கூட பில் ஏதும் அதிகமா வேணும்னா சொல்லுங்க இதெல்லாம் உங்க நாட்ல நடக்கறதுதானேன்னு சிரிச்சான்.. கேவலமா இருந்தது.. ஒரு நாற்பதாயிரம் ரூபாய்க்கு நாட்டையே வித்துட்டானுகளே.. அதுக்கு மேல அங்க ஒரு வாய் கூட சாப்பிட முடியல.. பில்லுக்கு பணம் குடுத்திட்டு "Not everybody from my country are cheap like that" அப்டின்னு வாங்கினதுக்கு கொஞ்சமேனும் திருப்பி குடுத்திட்டு கெளம்பிட்டேன்!!

2. வெளிநாட்ல பஸ், ட்ரெயின் எல்லாமே AC போட்ருக்கும்.. அதனால காற்றோட்டம் இருக்காது.. அந்த நேரத்துல உங்க வியர்வை மனம்கொண்ட அக்குளை கொண்டு போய் அந்த நாட்டுகாரங்களோட மூக்குல வெச்சா.. நாத்தம் புடிச்ச நாட்டுகார(ரி)ன்னு தான் சொல்லுவாங்க.. அதனால ஒரு நல்ல டியோடரன்ட் use பண்ணுங்க.. :))


3. தலைக்கு என்னை வெக்கறது நல்ல பழக்கம் தான்.. அதுக்காக ஒரு ஊருக்கே போடற அளவுக்கு வெச்சுட்டு போய் அடுத்தவன் டிரஸ்-ல எல்லாம் தேச்சுட்டு இருக்கக்கூடாது!!

4. Dutch Treat போகலாமான்னு கேட்டா.. Dutch Hotel-க்கு கூட்டிட்டு போய் சரக்கு வாங்கி தரப்போரான்னு, நாக்க தொங்க போட்டுட்டு போய் மூக்கு முட்ட குடிச்சுட்டு பில்-லுக்கு பணம் கேட்டா.. Treat-ன்னு சொல்லிட்டு மானங்கெட்டவன் பணம் கேக்கறான்னு அவன திட்டக்கூடாது.. Dutch treat-ன்னா பில் எவ்ளோ ஆனாலும் எல்லாரும் சமமா பிரிச்சு பணம் குடுக்கறதா இருக்கலாம்.. இல்லன்னா யார் எவ்ளோ சாப்டாங்களோ அதுக்கு அவங்களே பணம் குடுக்கணும்.. எதுன்னு சரியா தெரிஞ்சுட்டு போறது நல்லது!!


5. அந்த நாட்ல பப்ளிக்-ல உம்மா குடுக்கறது எல்லாம் சாதாரனமா இருக்கும்.. அதனால கொட்ட கொட்ட அதையே பாத்துட்டு இருக்கக்கூடாது.. லைட்டா ஓரக்கண்ல பாத்தும் பாக்காத மாதிரி போயிட்டே இருக்கணும்.. ;)))

அங்க வந்த நம்ம ஊர் ஜோடி ஒன்னு.. இத ட்ரை பண்ணிட்டு இருக்க.. நான் எதேச்சையா(சத்தியமாங்க) திரும்பி பார்க்க.. நான் பாத்தத அவங்க பாக்க..டப் டுப்புன்னு ரெண்டு பேரும் விலகி போக.. எல்லாருக்குமே ஒரே பப்பி ஷேம்.. நமக்கு தான் வரலியே.. அப்புறம் எதுக்கு இந்த வீண் விளம்பரம்.. இதெல்லாம் தேவையா மக்களே!!


6. நம்ம ஊர்ல ஆபீஸ் போயி காபி மொக்கை, லஞ்ச் மொக்கை, மதியம் டீ மொக்கை எல்லாம் போடற மாதிரி அந்த ஊர்ல பண்ணாதீங்க.. அவங்களுக்கு கலீக்ஸ் வேற நண்பர்கள் வேற.. அதனால வேலை நேரத்துல பேய் மாதிரி வேலைய மட்டும் பாத்துட்டு போயிகிட்டே இருப்பாங்க.. நடுல நீங்க போய் தேவை இல்லாம பேசினா தொந்தரவா தான் எடுத்துப்பாங்க.. சூதானமா இருக்கோணும்!!

 மற்றவை அடுத்த பகுதியில்.. இன்னும் மொக்கை முடியலையாடா சாமின்னு எல்லாம் சலிச்சுக்கப்பிடாது.. ஹி ஹி ஹி..